| ADDED : மே 24, 2024 11:08 PM
மெஜாரிட்டி பெறுவோம்!
'இண்டியா' கூட்டணி மெஜாரிட்டி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் திறன் இண்டியா கூட்டணிக்கு உள்ளது. அனைத்து இடங்களிலும் தோற்கப் போகும் பா.ஜ., எப்படி 400 தொகுதிகள் பெறும்? மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்மக்களுக்கு பலனில்லை!
லாலு பிரசாத், தன் மனைவியை முதல்வராக்கினார்; மகன்களை அமைச்சராக்கினார். ஒரு மகளை ராஜ்யசபா எம்.பி., ஆக்கியுள்ளார். மற்றொருவர் லோக்சபா தேர்தலில் நிற்கிறார். அவரால் அவர் குடும்பத்துக்கு தான் நன்மை. மக்களுக்கு எந்த பலனுமில்லை.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,கவலை தருகிறது!
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசுகள் பலவீனமாக இருந்ததாக, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களில் பேசுகிறார். இதுபோன்ற பேச்சுகள் கவலையை ஏற்படுத்துகின்றன. முக்கிய பதவியில் இருப்பவர்கள் கவனமுடன் பேச வேண்டும். சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி