உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி 1

தேசியம் பேட்டி 1

வரலாற்றை நினைவில் வையுங்கள்!இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1947 ஆகஸ்ட் 14, நம் வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் நடந்த தினம். லட்சக்கணக்கான மக்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்களுக்கு என் அஞ்சலி. வரலாற்றை நினைவில் வைத்திருக்கும் தேசத்தால் மட்டுமே சக்திவாய்ந்த அமைப்பாக முடியும்.அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ.,குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி!கோல்கட்டாவில் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடப்பது, மருத்துவ மனை மற்றும் அரசின் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ராகுல்எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்நினைத்து கூட பார்க்கவில்லை!மதுபான கொள்கை வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. விசாரணையை நீட்டிக்கும் வகையில் என் மீது குற்றச்சாட்டுகளை ஜோடித்தனர். சிறையில் என் மன உறுதியை உடைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், நான் வலுவாக இருந்தேன்.மணீஷ் சிசோடியாமூத்த தலைவர், ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்