உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது

நீட் தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: நீட் தேர்வு முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவாளி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று (ஜூலை 11) முக்கிய குற்றவாளி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பீஹார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி, பலரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ethiraj
ஜூலை 12, 2024 07:00

He must be jailed for 10 years RI. Then anyone will think twice before doing such acts His associate to be jailed for 3 years


venugopal s
ஜூலை 11, 2024 22:51

நீட் தேர்வு முறைகேடு விஷயத்தில் கைதானவர்கள் எல்லோருமே பாஜக ஆளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலான நிகழ்வா அல்லது ......?


N Sasikumar Yadhav
ஜூலை 12, 2024 00:33

பாஜக ஆள்கிற மாநிலம் என்பதால் சிக்கியிருக்கிறார்கள் ஆனால் இந்த திராவிட மாடல் களவானிங்க ஆள்கிற மாநிலத்தில் காவல்நிலையம் அருகில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் சிக்கவில்லை வேநு ஏறக்குறைய 66 பேர் கள்ளச்சாராயத்தால் செத்தவுடன்தான் கண்துடைப்பாக சில நடவடிக்கை எடுத்தது மானங்கெட்ட திமுக அரசு


தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2024 20:07

வினாத்தாளை கசிவு செய்தவர் பிடிபட்டுவிட்டார். இனியும் நீட்டை பற்றி பேசி யாரும் அரசியல் செய்து மாணவர்களை தற்கொலைக்கு தூண்டினால், பத்து வருடம் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும். படித்தால் நீட் பாஸ் பண்ணலாம். படிக்காவிடில் நர்ஸ் ஆகலாம். தேவையின்றி ஒப்பாரி வைத்தால் ஜெயில் தான்.


D.Ambujavalli
ஜூலை 11, 2024 19:53

இதுதான் சமயம் என்று பெரிதாக்க குரல் எழுப்பலாமே 'neet ஒழிக' என்று அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மருத்துவக் கல்லூரிகளில் தடையில்லாமல் கோடிகளைக் கறந்து மேல்குடியினர், பெரும்பணக்காரர்களின் வாரிசுக்களே மருத்துவர்களாகலாம்


ஆரூர் ரங்
ஜூலை 11, 2024 19:11

முறைகேடாக கேள்வித்தாளை வாங்க பெற்றவர்களும் மாணவர்களும் ஆசைப்படும்வரை திருடர்களும் உருவாகிக் கொண்டேயிருப்பர். A1 குற்றவாளிகள் இவர்களே.


Sridhar
ஜூலை 11, 2024 18:14

நேர்மையாக படித்து தேர்வாக வேண்டும் என்கிற மனநிலை குறைந்து வருகிறது. அரசியல் சூழ்நிலை நாடு முழுவதும் நேர்மை, உண்மை, திறமைக்கு ஊக்குவிக்க வேண்டும்.


Apposthalan samlin
ஜூலை 11, 2024 18:06

இப்பதான் கைதே பண்ணுகிறீர்களா ? சுத்தம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ