உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரம்: பின்தேதியிட்ட காசோலைகள் மீட்பு

நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரம்: பின்தேதியிட்ட காசோலைகள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: சமீபத்தில் நடந்த நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ஆறு பின்தேதியிட்ட காசோலைகளை, பீஹார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். சமீபத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்வின்போது, கேள்வித்தாள் கசிந்தது உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பீஹார் போலீசின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, நான்கு மாணவர்கள், அவர்களுடைய குடும்பத்தார் உட்பட, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேள்வித்தாளை வழங்குவதற்காக, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து, ஒரு கும்பல், தலா, 3-0 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளது. சிலர், பின்தேதியிட்ட காசோலைகளை வழங்கிஉள்ளனர்.பாட்னாவின் ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நாள், 35 பேருக்கு கேள்வித்தாள் மற்றும் விடைகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீஹாரைச் சேர்ந்த ஏழு பேர், உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, தலா ஒரு மாணவர் என, ஒன்பது மாணவர்களை விசாரணைக்கு, பீஹார் போலீஸ் அழைத்துள்ளனர்.அந்த குறிப்பிட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆறு பின்தேதியிட்ட காசோலைகளை போலீசார் நேற்று மீட்டு உள்ளனர். இதைத் தவிர, எரிக்கப்பட்ட நிலையில் கேள்வித்தாள்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தேர்வின்போது வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையிடம், பீஹார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vathsan
ஜூன் 17, 2024 09:46

குஜராத், பீகார் அரசுகள் நீட் முறைகேட்டாளர்களுடன் கூட்டு சதி. மற்ற மாநில மாணவர்களுக்கு நாமத்தை சாத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை தேவை, தவறு செய்தவர்களும் ஆட்சியாளர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க தயங்குவது ஏன்.


D.Ambujavalli
ஜூன் 17, 2024 05:54

கல்வித்துறை முதல் சிவில் services வரை ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள கறுப்பாடுகள் உள்ளவரை இந்த தேர்வு வினாத்தாள் கசிவுக் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கும் பெற்றவர்கள் பிள்ளைகள் நன்கு படித்துத் தயார் செய்துகொள்கிறார்களா என்று கவனிப்பதை விட, எங்கு வினாத்தாள் கிடைக்கும், யாரிடம் விடைத்தாள் திருத்த செல்கிறது என்று குறுக்குவழியில்தான் சிந்திக்கிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை