| ADDED : ஆக 02, 2024 06:11 AM
பாலக்காடு:நிலச்சரிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நெல்லியாம்பதி பாதை விரைவில் சீரமைக்கப்படும், என, ஊராட்சி- மற்றும் கலால் துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட, போத்துண்டி- - நெல்லியாம்பதி பாதையை ஊராட்சி மற்றும் -கலால் துறை அமைச்சர் ராஜேஷ் பார்வையிட்டார்.அதன்பின், அவர் கூறியதாவது:நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்ட, போத்துண்டி- -- நெல்லியாம்பதி பாதை விரைவில் சீரமைக்கப்படும். அதன்பின், நெல்லியாம்பதியில் சிக்கி உள்ளவர்களை வெளியில் அழைத்து வர முடியும்.தற்போது சாலை சீரமைப்புபணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. நெல்லியாம்பதிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து, மருத்துவக் குழுவினர், ஒன்பது கி.மீ., நடந்து சென்று நெல்லியாம்பதியில் பணியாற்றுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.