உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

புதுடில்லி: 'சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை நான் ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: அம்பேத்கர் முதல் நேரு வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது. காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலைத் தான், நான் எதிர்த்து வருகிறேன். சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ., ஒரு நாளும் செயல்பட்டதில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ppi727g9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

400 தொகுதிகள்

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நோக்கத்தை சிதைக்கும் காங்கிரஸ் முயற்சியை மக்களிடையே நான் அம்பலப்படுத்துகிறேன். இந்த முறை தென் மாநிலங்களில் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தென் மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளில் வெல்லும்.

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி

பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக கோயில் சாவி காணவில்லை. ஒடிசாவில் கனிமங்கள் கொள்ளை நடக்கிறது. ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அங்கு வறுமை நிலவுகிறது. இதனை கண்டு வேதனை அடைகிறேன். ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜூன் 10ம் தேதி பதவியேற்பு விழா

ஒடிசா மாநிலம் தென்கனல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: பா.ஜ., அரசை மூன்றாவது முறையாக மீண்டும், ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் அனைவரும் விரும்புவது, அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசாவின் மகன் அல்லது மகளை மட்டுமே பா.ஜ., முதல்வராக்கும். ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பா.ஜ,, ஆட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம். அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம் தான் வழிகாட்டி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வழிபாடு

முன்னதாக, புரி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜகந்நாதரை வழிபட்டார். இதையடுத்து, புரியில் நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தத்வமசி
மே 20, 2024 14:11

நீங்க தான் நல்ல உருட்டுறீங்க வெறும் தமிழகத்தின் யுடியுப் சேனல்களைப் பார்த்து தேசத்தின் நிலவரத்தை கண்டு கொண்டால் இப்படித்தான் தெரியும் நாலு குருடர்கள் ஒரு யானையை தடவி கண்டு சொன்னது போல இருக்கிறது உங்களின் கூற்று


venugopal s
மே 20, 2024 13:51

பேசிப்பேசி நேரத்தை வீணடிக்காமல் எல்லாமே செயல் மட்டும் தான் என்கிறாரா?


GMM
மே 20, 2024 13:49

கல்வி பெற பத்தாண்டு இட ஒதுக்கீடு கோரிக்கை ஆதிக்க சாதி கல்வி, வேலை, அரசியல் இட ஒதுக்கீடு நூறு ஆண்டு நோக்கி பயணம் சிறுபான்மை வாக்கு வங்கி உருவாக்கம் மாநில கட்சிகள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அமுல் விரிவாக்கம் ஒருவர் உழைப்பு இன்றி பலன் அடையும் போது, மற்றொருவருக்கு பாதிப்பு? வானளாவிய அதிகாரம் உண்டு என கூறி வரும் அரசியல் சாசன நீதிமன்றம் பதில் என்ன? சிறுபான்மை அந்தஸ்து நீக்கம், குடும்ப கட்டுப்பாடு அவசியம் சாதி, மத அடையாளம் வீட்டில் மட்டும் அரசு உருவாக்கினால், பிரிவினை உருவாகும்


Jai
மே 20, 2024 13:20

தற்போது இங்கு உள்ள நிலைப்பாட்டில் பெரும்பான்மையினருக்கு ஆதரவாக ஏதாவது பேசினாலே அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று சித்தரிக்கப்படுகிறது. போலியான secularism போதிக்கப்பட்ட மக்கள் இதை ஒத்துக் கொள்ளுகின்றனர்.


Kasimani Baskaran
மே 20, 2024 13:14

வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வேலைக்கு வந்தால் வடக்கன், பீடா வாயன் போன்று வசை மொழிகள் - ஆனால் அந்நிய ரோகிங்கியாக்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் இதுதான் எதிர் அணியில் இருக்கும் தீம்காவின் நிலைப்பாடு அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் எதிலும் அவர்களை அடித்து விரட்டவில்லை - அது மட்டுமல்ல இஸ்லாமியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக்கொள்வது இல்லை பின்னர் ஏன் ஏற்கனவே இருக்கும் மக்கள் தொகை பிரச்சினையில் பெரும் அளவில் வெளிநாட்டு இஸ்லாமியர்களை இந்தியாவுக்குள் விட வேண்டும்? ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசும் எதிரிக்கட்சிகள் திருந்தவேண்டும்


ஆரூர் ரங்
மே 20, 2024 12:28

மதப் பிரச்சினைகள்தான் நாட்டைத் தூண்டாடியது. மத அடிப்படையில் சலுகைகளையளிப்பது மேலும் பிரிவினைவாதத்தையே உருவாக்கும்.


RAMAKRISHNAN NATESAN
மே 20, 2024 12:24

புதுக்கோட்டை வாசகர்கள் தகவலை உறுதிப்படுத்துங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் திருக்கோவில் குளத்தை ஆக்கிரமித்து ஸ்ரீ மகாதேவ சாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து பெந்தகோஸ்து சர்ச் கட்ட மணல் ஜல்லி கொண்டு வந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள் தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் பணம் பெற்றுக்கொண்டு ர வு டிச ம் செய்கிறார்கள் பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும் நீதிமன்ற ஆணை, பத்திரம் அனைத்தும் கோவிலுக்கு சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து சர்ச் கட்ட வேண்டும் என்று தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள் கோயிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர் அவர் ஊரை விட்டே சென்று விட்டார் நிம்மதியாக கடவுள் வழிபாடு கூட செய்ய முடியாத அளவிற்கு பெந்தகோஸ்து ஆட்களால் அப்பகுதி இந்துக்கள் மிரட்டப்படுகிறார்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ