மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 6
ஷிவமொகா : ''லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின், புதிய கட்சி துவங்குவதற்கு நான் எடியூரப்பா அல்ல,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவின் இறுதிக்கட்டத்தில், பொய்யான செய்தியை பரப்பி, எனக்கு எதிராக, பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா சதி செய்தார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஷிகாரிபுராவில் பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் தடுத்தார். ஷிராளகொப்பாவின், தேசபக்தர்கள் அலுவலகம் அருகில் மாந்திரீகம் செய்தனர். 'எனக்கு போடுவது போன்று, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள்; என் தவறு எனக்கு புரிந்துள்ளது. என்னால் காங்கிரசுக்கு லாபம் ஏற்படக் கூடாது' என, நான் கூறியதாக செய்தியை வெளியிட்டனர். என் பழைய போட்டோக்களை நாளிதழ்களில் வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தினர். 2019 லோக்சபா தேர்தலின்போது, ஷிவமொகா பா.ஜ., வேட்பாளராக இருந்த ராகவேந்திராவுக்கு ஆதரவாக, நான் பிரசாரம் செய்த வீடியோவை, இப்போது பரப்பியுள்ளனர்.ஓட்டுப்பதிவு நாளன்று, பொய்யான செய்தி, வீடியோக்களை பரப்பியது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன். இந்த பிரச்னையால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். எனக்கு ஆதரவாக வரவிருந்த ஓட்டுகளை தடுத்து நிறுத்தினார்.எனக்கு எதிராக சதி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க, வரும் 15ம் தேதி வரை அதிகாரிகளுக்கு அவகாசம் அளித்துள்ளேன். தவறினால் அடுத்த கட்ட முடிவை எடுப்பேன்.பா.ஜ., என் தாயை போன்றது. கட்சியுடன் இருப்பேன். தேர்தல் முடிவு வெளியான பின், புதிய கட்சி துவங்க நான் எடியூரப்பா அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துத்வா கொள்கையை காப்பாற்றுவது, என் குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 6