உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை

இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை

புதுடில்லி : வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்படும். இதன் வாயிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.சுங்கச்சாவடிகளில் காத்திருந்து பணம் செலுத்துவதை தவிர்க்கவும், நேரம் விரயமாவதை தடுக்கவும் இந்த நடைமுறை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் சேவையை, பல்வேறு வங்கிகள் அளிக்கின்றன.என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், இது தொடர்பான சில நடைமுறைகளை அறிவித்துள்ளது. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி., எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வரும், அக்., 31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பாஸ்டேக் வாங்கியவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பாஸ்டேக் வாங்கியிருந்தால், அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் போன் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Apposthalan samlin
ஆக 01, 2024 10:46

இவர் 60km குல் டோல் கட்டவேண்டாம் என்று சொன்னாரே உண்மையா? திருநெல்வேலி யில் இருந்து நாங்குநேரி 32km தான் பின்னர் ஏன் டோல் பிடிக்கிறார்கள் ?


அப்பாவி
ஆக 01, 2024 10:32

எத்தைத் தின்னா பித்தம் தெளியும்னுட்டு இருக்கு இவிங்க செயல்முறை. ஆனா, பிரசிடென்லேருந்து, பிரதமரிலேருந்து, கவுன்சிலர் ஜட்ஜ் வரை எல்லோருக்கும் ஃப்ரீ. ஒருத்தர் கூட டோல் காசு குடுக்க மாட்டாங்க.


Haridev Prasath
ஆக 01, 2024 09:30

நாடு எதில் முன்னேற்றம் அடைகிறது என்றால் வரியில் மட்டும் தான்...இப்படியே நாம் புலம்புவது மட்டும் தான் செய்ய முடியுமா???


K.Muthuraj
ஆக 01, 2024 09:03

ஒவ்வொரு கார்பொரேஷனிலும் நகராட்சியில் கொடுக்கும் வரிகள் லஞ்சங்கள் இதில் சேர்த்தியாகின்றது.


M.Subramanian S.Meenakshisundaram
ஆக 01, 2024 09:00

நல்ல வேளை. எனக்கு நடராஜ சர்வீஸ்தான்


J.Isaac
ஆக 01, 2024 11:53

பெருமை படாதீர்கள். அதற்கும் வரி வசூலிக்கப்போகிறார்கள்.


Surya
ஆக 01, 2024 16:19

Mmm


J.Isaac
ஆக 01, 2024 08:25

கொடுமை வரி, அநியாய வரி.


S.K. PADMANABHAN
ஆக 01, 2024 08:21

Good


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை