| ADDED : ஜூன் 03, 2024 04:04 AM
தங்கவயல் : தங்கவயல் நகர தி.மு.க.,வின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.ராபர்ட்சன் பேட்டை பிரிட்சர்ட் சாலையில் தி.மு.க., அலுவலகம் உள்ளது. இதை புதுப்பித்துள்ளனர். தி.மு.க., தலைவர்கள், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் இழந்தவர்கள், தங்கவயலின் தி.மு.க., பிரமுகர்கள் படங்கள் புதியதாக வைக்கப் பட்டுள்ளன.நிகழ்ச்சிக்கு நாராயண மூர்த்தி தலைமை வகித்தார், அறிவழகன் வரவேற்றார். தி.மு.க., கொடியை ஆண்டாள் கிள்ளி வளவன் ஏற்றினார். மாநில தி.மு.க. முன்னாள் அமைப்பாளர் கிள்ளி வளவன், ஆனந்த ராஜ், ஆதித்தன், கலையரசன், சேகரன், மதியழகன், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.