உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி மீண்டும் முதல்வராக வேண்டுமாம் : மீண்டும் குழப்பிய நிதிஷ்

மோடி மீண்டும் முதல்வராக வேண்டுமாம் : மீண்டும் குழப்பிய நிதிஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என தான் விரும்புவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் (25.05.2024) 6-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பாட்னாசாஹிப் மக்களை தொகுதிக்குட்பட்ட டானியாவான் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நாட்டில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் முதல்வராக வர வேண்டும். நாடும் வளர்ச்சி அடையும் பீகாரும் முன்னேற்றம் அடையும். எல்லாம் நடக்கும். இவ்வாறு நிதிஷ் பேசினார்.முதல்வர் நிதிஷின் தவறை சுட்டிக்காட்டிய சக எம்.எல்.ஏ., தொடர்ந்து பேசிய நிதிஷ், மோடி ஏற்கனவே பிரதமராக இருந்து வருகிறார். அவர் இப்போதும் பிரதமராக முன்னேறுவார் என்று நான் சொல்கிறேன் அது தான் எனக்கு வேண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ,2020--ம் ஆண்டு மறைந்த ராம் விலாஸ் பஸ்வானுக்கு நிதிஷ் வாக்கு கேட்ட சில தினங்களுக்குள் இந்தகுழப்பம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
மே 27, 2024 07:17

உண்மை மட்டுமே ஆழ் மனதில் இருந்து வரும்


sankaranarayanan
மே 26, 2024 23:46

தமிழ் நாட்டு முதல்வரையும்தான் தளபதி என்கிறார்கள் அவர் எந்த படைக்கு தளபதி அல்லது எந்த நாட்டின் தளபதி இதெல்லாம் பெருமையாக சொல்லும் சொற்கள் அவ்வவளேதான்


ஆரூர் ரங்
மே 26, 2024 21:53

ஸ்டாலின் படத்தைப் பார்த்துவிட்டு நேரே மேடைக்கு வந்திருப்பார்.


Syed ghouse basha
மே 26, 2024 21:37

என்ன ஆச்சு பஜக கூட்டணிக்கு? பிரதமர் ஒருபக்கம் முன்னுக்குபின் பேசுகிறார் அமித்ஷா ஒருபக்கம் சர்ச்சையாக பேசுகிறார் நித்திஷ் குமார் உளறுகிறார் ஒருவேளை சேம்சைடு கோல் போடுகிறாரோ?


sankaranarayanan
மே 26, 2024 21:12

நாட்டினுடைய முதல்வர் என்றால் என்ன அர்த்தம் பிரதமர் என்றுதானே அர்த்தம் இதில் ஒன்றும் பெரிய தவறு நடந்திடவில்லை நாட்டினுடைய அதிபதி என்றால் என்ன அர்த்தம் ஜனாதிபதி என்றுதானே அர்த்தம் அதற்காக முப்படை அதிபதி ஜெனெரல்தான் அதிபதி என்றா அர்த்தம்


sundarsvpr
மே 26, 2024 20:38

நரேந்திரன் இந்திய தேசத்தின் முதல்வர். அதாவது எல்லா முதல்வர்களுக்கும் முதல்வர். இதுதான் நிதிஸ் ஆசை. பேசியதில் குற்றம் காணமுடியாது.


மணி
மே 26, 2024 21:23

பூனை மேல் மதிலை விட எவ்ளோ மேல்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை