மேலும் செய்திகள்
மதுராவில் ரோப் கார் அமைக்கும் பணி நிறைவு
22-Aug-2024
பெங்களூரு: “உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று, தைரியமான தலைவர் நாட்டில் இல்லை,” என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், 350க்கும் மேற்பட்ட கிரிமினல்களை உத்தர பிரதேசத்தில் என்கவுன்டர் செய்துள்ளனர்.நாட்டில் இதுபோன்று தைரியமான தலைவர், வேறு ஒருவர் இல்லை. உத்தர பிரதேசம் ஏழெட்டு ஆண்டுகளாக, சட்டம் - ஒழுங்குக்கு முன் மாதிரியாக உள்ளது.உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு செல்வாக்கு உள்ளது. ரவுடிகளின் தொல்லை உள்ளது. இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ள மாநிலத்தில், ஆட்சி நடத்துவதும், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதும், அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் யோகி ஆதித்யநாத் ரவுடிகள், குண்டர்களை ஒடுக்கியுள்ளார்.உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று, தைரியமான தலைவர் நாட்டில் இல்லை. இவரை போன்று என்கவுன்டர் செய்யும் தைரியம், வேறு எந்த தலைவரிடமும் இல்லை.நாட்டின் வேறு எந்த மாநிலங்களில் நடக்காத அளவுக்கு, உத்தர பிரதேசத்தில் என்கவுன்டர் நடந்துள்ளது. சில ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட என்கவுன்டர் நடந்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல, சத்தீஸ்கரிலும் நடந்தது என்றாலும், அங்கு நக்சல் செயல்பாடு காரணமாக இருந்தது. ஆனால் உத்தர பிரதேசத்தில், குற்றவாளிகள், கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
22-Aug-2024