உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேரழிவின் போது ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை: பிரியங்கா குற்றச்சாட்டு

பேரழிவின் போது ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை: பிரியங்கா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்ட போது, மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். ஹமாச்சல் பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரயங்கா பேசியதாவது: ஹமிர்பூர் தொகுதி எம்.பி.யை பார்க்க முடியுமா?. டில்லியில் உள்ள ஹோட்டல்களில் பெரிய தொழிலதிபர்களை சந்திப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். மக்களை சந்திக்க வருவாரா?. பிரதமர் மோடி கூட தனது தொகுதியான வாரணாசியில் மக்களை சந்திக்க செல்வதில்லை. நான் சென்று வருகிறேன்.

சித்தாந்தம்

வாரணாசியில் பிரதமர் மோடி எந்த கிராமத்திற்கும் சென்றது இல்லை. பா.ஜ.,வின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுப்பட்டது. நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹிமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

பேரழிவு

மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை. பேரழிவின் போது ஒரு பா.ஜ., தலைவர் கூட நேரில் வந்து மக்களை பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசு அனைத்து செலவுகளையும் ஏற்று மக்களுக்கு நிவாரணம் வழங்கியது. நாங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயன்ற போது, பிரதமர் ​​மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எங்கள் ஆட்சியை வீழ்த்துவதில் மும்முரமாக இருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
மே 28, 2024 20:37

ஒரு ரூபாய் நிதி எப்படி வழங்கமுடியும்? அதில் ஒரு கமர்கட் கூட வாங்கமுடியாது. கொடுத்த நிதியுதவியை மறைத்துவிட்டு, ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை என்று வாய் கூசாமல் குற்றம் சாட்டுகின்றனர்.


Kasimani Baskaran
மே 28, 2024 15:36

முன்னர் போல அல்லாமல் மாநிலங்களுக்கு பேரழிவு நிதி முன்னரே கொடுக்கப்படுகிறது. மாநிலங்கள் பழைய லாவணி பாடி கூடுதலாக நிதி கொடுக்கவில்லை என்று உருட்டுவதிலேயே கவனம் செலுத்தி இருக்கும் நிதியை செலவு செய்யாமல் அமுக்கி விடுகிறார்கள் - அல்லது வேறு இலவசங்களுக்கு திருப்பி விடுகிறார்கள்.


Murugesan
மே 28, 2024 15:12

அடிமைகளுக்கு காமாலை கண், 70 வருடங்களாக நாட்டின் வளங்களை சூரையாடிய அயோக்கிய கொலைகார கொள்ளைக்கார கூட்டு களவானி காங்கிரஸ்காரனுங்க, திராவிட நாதாரிங்க


Syed ghouse basha
மே 28, 2024 15:00

அவர்கள் பேரழிவிற்கு உதவ நிதி தரமாட்டார்கள் பேரழிவை உருவாக்க தான் நிதி தருவார்கள்


வாய்மையே வெல்லும்
மே 28, 2024 17:10

குக்கர் பாம் ஆட்கள் நன் நெறிமுறைகளின் சித்தாந்தம் பேசினால் வேடிக்கையின் உச்சம் தான் போங்க


ஆரூர் ரங்
மே 28, 2024 14:45

ஹிமாச்சலில் எத்தனையோ ஏழைகள் வாடியிருக்கும் நிலையில் அங்கு பல ஏக்கரில் அரண்மனை போன்ற மாளிகை கட்டியிருக்கிறீர்கள். ஏழைகள் பற்றி பேசாமல் இருங்க.


அசோகன்
மே 28, 2024 14:24

ஹிமாசலில் பிஜேபி தான் மக்களுக்கு உதவியது... அப்போது இவர் எங்கே இருந்தார்.... பொய் பேச ஒரு அளவு வேண்டும்


S.Bala
மே 28, 2024 14:23

உங்கப்பா விட்டு காசுலயா குடுத்தீங்க? இண்டி கூட்டணி ஆளுங்க எல்லாம் ஒரு மார்க்கமாதான் திரியறாங்க .


sankar
மே 28, 2024 14:10

ஸ்டாளின் பெருமகனார் சொன்ன அதே பொய் - வேறு ஒரு வாயில் இருந்து


Lion Drsekar
மே 28, 2024 14:08

தகுதியும் திறமையும் மக்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய , எளிமையாகவும் வாழும் தியாகிகளை ஒருபோதும் மதிக்காமல் வாக்காளர் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது . மேலே ஒருவன் இருக்கிறார் என்று 70 ஆண்டுகாலம் கண்ட பலன் , இன்று எல்லாமே கலைக்கு மேலே சென்றுவிட்டது . எல்லா துறைகளிலும் புரையோடிவிட்டது . கண்ணால் காண்பது பொய் , காதால் கேட்பதும் பொய் ,தீர விசாரிப்பது அதைவிட பொய் என்றாகிவிட்ட நிலையில் , என்ன செய்வது , இன்றைக்கு எல்லாமே தவறானவர்கள் கைகளில் உள்ளதால் அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஒளி, ஒலி பரப்பப்படுகிறது . இதையும் தாண்டி ஒரு நல்லது நடப்பதை மக்களுக்கு சேர்க்க முற்படுவோர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் இதுதான் இங்கேயே நரகம் . தீர்வு ?? வாக்காளர்கள் கைகளில் மட்டுமே . எல்லாமே கணக்கு வந்தால் மட்டுமே தெரியும் . அப்போதுதான் உணரும் நேரம் வரும் .


Logu
மே 28, 2024 13:44

இந்த திருட்டு குடும்பம் நாட்டை கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு துளி கொடுத்தாலும் நாட்டின் வறுமை என்றோ விலகி இருக்கும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை