உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் 3-வது காங்., எம்.எல்.ஏ பா.ஜ.,வில் ஐக்கியம்

ம.பி.,யில் 3-வது காங்., எம்.எல்.ஏ பா.ஜ.,வில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மாநிலத்தில் காங்., ஆட்சியில் இல்லை, அதனால் வளர்ச்சியும் இல்லை என ம.பி., மாநிலத்தில் பா,ஜ.வில் சேர்ந்த மூன்றாவது காங்., எம்.எல்.ஏ.,வான நிர்மலா சுப்ரே கூறி உள்ளார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முறையாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டன.இருப்பினும் மார்ச் மாதம் 29-ம் தேதி ம,பி., மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அமர்வாரா தொகுதி காங்., எம்.எல்.ஏ., கமலேஷ் ஷா பா,ஜ,வில் இணைந்து கட்சி மாறுதலை துவக்கி வைத்தார்.இதனிடையே கடந்த ஏப்., 19-ம் தேதி முதற்கட்ட தேர்தல் ம.பி.,யி்ல் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அடுத்த கட்டமாக வரும் 7-ம் தேதி மூன்றாம் கட்டம், 13-ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் மாநிலத்தில் நடைபெற உள்ளது.தொடர்ந்து கடந்த ஏப்.,30 ம் தேதி இரண்டாவது காங்., எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் என்பவர் பா.ஜ.வில் இணைந்தார்.தற்போது இன்று ( மே.,5-ம் தேதி) பினா சட்டசபை தொகுதி காங்., எம்.எல்.ஏவான நிர்மலா சுப்ரே பா.ஜ.,வில் இணைந்துள்ளார். மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ரஹத்கர் என்ற இடத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பா.ஜ., முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் நிர்மலா சுப்ரே பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலத்தில் தற்போது காங்., ஆட்சியில் இல்லை, எதிர்கட்சிக்கு வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை. தனது தொகுதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தேன். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை, எனவே பா,ஜ.,வில் இணைந்தேன். பிரதமர் மற்றும் முதல்வர் மோகன்யாதவ் தலைமையில் நான் வளர்ச்சி நீரோட்டத்தில் இணைந்தேன் என அவர் விளக்கம் அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramar P P
மே 07, 2024 13:07

வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே அதற்காக கட்சி மாற வேண்டுமா


chails ahamad
மே 06, 2024 14:12

நம்பிக்கை துரோகிகளின் புகலிடம் பா ஜ வென உள்ளதாலே , கட்சி விட்டு கட்சி மாறும் யோக்கிய சிகாமணிகளை வரவற்பதில் என்ன பெருமைபட வேண்டியுள்ளது


தாமரை மலர்கிறது
மே 05, 2024 23:12

இது ஜஸ்ட் டீசர் தான் தேர்தல் முடிந்தவுடன், கொத்து கொத்தாக காங்கிரஸ் கட்சியினர் பிஜேபியில் இணைவார்கள் இது தான் காங்கிரஸ் இன் கடைசி தேர்தல் இனி ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா பிஜேபி ஆட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்


Raj Kamal
மே 05, 2024 21:29

இதே வாய் தான் நாளை வேறு மாதிர"சொல்லும் காங்கிரஸ்சுக்கு சென்றிருந்தால்


Priyan Vadanad
மே 05, 2024 20:31

வெற்றி பெறும் கட்சியில் இணைந்து மக்களுக்காக உழைப்பது நல்லதுதான்


Godfather_Senior
மே 05, 2024 19:53

தேர்தல் முடியரத்துக்குள்ளே மொத்த புள்ளி வச்ச இ ண் டி கூட்டணி பெரிய தலைகள் எல்லாம் பாஜகவில் இணைந்தால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை குடும்ப கட்சி தலைவர்கள் மட்டும் கட்சி நடத்தி கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்கும் போலும்


Bahurudeen Ali Ahamed
மே 05, 2024 20:19

பாஜாகா தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேலையை செய்து வருகிறது, அதற்கும் முட்டு கொடுக்க முடிகிறதே எப்படி சகோ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை