உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய நர்ஸ்கள்

அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய நர்ஸ்கள்

சாம்ராஜ் நகர்: சிறந்த மருத்துவமனை என்று பெயர் பெற்ற சந்தேமாரஹள்ளி மருத்துவமனையில், பிரசவத்துக்கு செவிலியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைளத்தில் பரவி வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், சந்தேமாரஹள்ளியில் உள்ள தாய், சேய் மருத்துவமனை பிரசித்தி பெற்றது. சிறந்த மருத்துவமனை என பெயர் பெற்றுள்ளது.இந்நிலையில், இம்மருத்துவமனை செவிலியர்கள் பிரசவத்துக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.அத்துடன் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு கட்டணம் வசூலிக்கின்றனர். சுக பிரசவத்துக்கு 3,000 ரூபாய்; அறுவை சிகிச்சைக்கு 20,000 ரூபாய்; கருத்தடை அறுவை சிகிச்சைக்கு 3,000 முதல் 8,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இங்கு கருப்பை அறுவை சிகிச்சைக்கு 35,000 ரூபாய் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரி சிதம்பரம் கூறுகையில், ''இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களின் வாக்குமூலம் பெற்ற பின், இரண்டு நாட்களில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை