உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., ரயில் விபத்து விசாரணை கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு

உ.பி., ரயில் விபத்து விசாரணை கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு

புதுடில்லி : உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக கூட்டுக்குழு முறையாக விசாரணை நடத்தாமல் அறிக்கை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.யூனியன் பிரதேசமான சண்டிகரில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 18ம் தேதி உத்தர பிரதேசத்தின் கோண்டா அருகே தடம் புரண்டது. இதில், நான்கு பயணியர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து ஐந்து நிபுணர்கள் அடங்கிய கூட்டுக்குழு விசாரணை நடத்தியது. இந்த குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், 'விபத்து நடந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்களில் உபகரணங்கள் முறையாக பொருத்தப்படாததே விபத்திற்கு காரணம்' என, குறிப்பிட்டுள்ளது.எனினும், இந்த விசாரணை குழுவில் இடம்பிடித்துள்ள அதிகாரி ஒருவர், மற்ற உறுப்பினர்களின் கருத்தை ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'முழுமையாக ஆய்வு செய்யாமல் கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு கமிஷனர் நடத்தும் விசாரணையின் வாயிலாக உண்மையான காரணம் தெரிய வரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி