உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாள் நானும் ஆவேன்... கடிதம் எழுதிய கேரள பள்ளி மாணவன்; நெகிழ்ந்து போன இந்திய ராணுவம்!

ஒரு நாள் நானும் ஆவேன்... கடிதம் எழுதிய கேரள பள்ளி மாணவன்; நெகிழ்ந்து போன இந்திய ராணுவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேரளா; வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு கேரளாவைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் எழுதிய கடிதம் நெகிழச் செய்துள்ளது.

பலி அதிகரிப்பு

அண்மையில் பெய்த கனமழையினால் வயநாட்டில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை கிராமங்கள் மண்ணோடு மண்ணாகின. இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200 பேரை காணவில்லை.

இந்திய ராணுவம்

மீட்பு, நிவாரணப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து 6வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள், காட்டுப்பகுதிகளில் தஞ்சம் புகுந்தவர்கள் என அனைவரையும், பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கும் இந்திய ராணுவத்தினரின் செயல்கள் பாராட்டுக்குள்ளாகி வருகிறது.

மாணவன் கடிதம்

குறிப்பாக, நிலச்சரிவு ஏற்பட்ட உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற இந்திய ராணுவத்தினர், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமத்திற்குச் செல்ல, 190 அடியில் இரும்பாலான தற்காலிக பாலத்தை விரைந்து கட்டி முடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தை பாராட்டி கேரளாவைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராயன் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நானும் ஆவேன்

அந்தக் கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களே, நிலச்சரிவால் நிலைகுலைந்து போன எங்களின் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நீங்கள் மீட்கும் பணிகளைப் பார்க்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் பசிக்கு வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலத்தை நீங்கள் கட்டிய வீடியோவை பார்த்தேன். இவை அனைத்தும் என்னை இந்திய ராணுவத்தில் ஒருநாள் இணைத்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளது, எனக் குறிப்பிட்டிருந்தான்.

நன்றி, இளம் வீரனே

அவனது இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த இந்திய ராணுவத்தினர், ' நீங்கள் இந்திய ராணுவத்தின் சீருடையை அணிந்து எங்களுடன் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். நன்றி, இளம் வீரனே,' எனக் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
ஆக 04, 2024 22:25

இந்த குழந்தை ராணுவ அதிகாரி ஆக வேண்டும்.


Ramesh Sargam
ஆக 04, 2024 13:46

இந்த சிறுவன்தான் உண்மையான ஹீரோ. மற்ற ஹீரோக்களெல்லாம், மோகன்லால் போன்ற ஒருசிலரைத்தவிர, ஸீரோ. குட்டி வீரனுக்கு சலூட்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 12:16

அதுக்காக நீங்க எங்களை ஜெய் ஹிந்த், பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் இதெல்லாம் சொல்ல கட்டாயப் படுத்தக்கூடாது ... மீனாட்சி லேஹி அம்மா பட்ட பாடு ஞாபகம் இருக்கட்டும் ...... இப்படிக்கு மல்லூஸ் .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 12:14

கேரள குட்டிப்பாம்பு கூட விஷமுள்ளதுதான் .......


sridhar
ஆக 04, 2024 13:18

இல்லை , வயது ஏற ஏற தீய கம்யூனிச கான் கிராஸ் போதனைகளுக்கு பலி ஆகி தான் கெட்டுப்போகிறார்கள் .


aaruthirumalai
ஆக 04, 2024 11:01

துயரமான சூழ்நிலையிலும் மனதிற்கு இதமான நிகழ்வு.


Kasimani Baskaran
ஆக 04, 2024 10:36

பாராட்டத்தக்க செயல். இது ஒரு பக்கம் என்றால் அடுத்த பக்கத்தில் பாலஸ்தீன தலைவரை கொலை செய்ததை கண்டித்து ஒரு கூட்டம் ஊர் ஊராக கொடிபிடித்து கோஷம் போட்டு ஊர்வலம் போகிறார்கள்.


Kalyanaraman
ஆக 04, 2024 10:34

இதுபோல் தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழில் ஒரு கடிதம் எழுதும் அளவுக்கு தமிழகத்தில் கல்வித் தரம் உள்ளதா? கழக ஆட்சிகள் மாறி மாறி நம்மை தற்குறிகளாக்கி அரசியல்வாதிகள் வயிறு வளர்த்தது தான் சாதனை.


Anantharaman Srinivasan
ஆக 04, 2024 08:55

வெரி good


RAJ
ஆக 04, 2024 08:23

ஜெய் ஹிந்த் ....எல்லா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்., மதரஸாக்களிலும் இந்த கடிதத்தின் பிரதி எடுத்து ஒட்டவும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ