உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் கசிவு மேலும் ஒருவர் கைது

நீட் வினாத்தாள் கசிவு மேலும் ஒருவர் கைது

புதுடில்லி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தாண்டுக்கான தேர்வு மே 5ல் நாடு முழுதும் உள்ள 4,750 மையங்களில் நடந்தது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு முக்கிய காரணியாக செயல்பட்டஜார்க்கண்டின் தன்பாத் நகரைச் சேர்ந்த அமன் சிங் என்பவர் இந்த வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை