| ADDED : ஜூலை 31, 2024 01:52 AM
புராரி:வடக்கு டில்லியில் கால்வாயில் கார் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.வடக்கு டில்லியின் புராரி பகுதியில் ரிங் ரோட்டில் உள்ள மெட்ரோ துாண் அருகே, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:00 மணி அளவில் ஒரு கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிழக்கு மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் அங்கு வந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். 20 நிமிடங்களில் கார் விழுந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் புட்டின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டது. காரில் சடலம் இல்லை.நள்ளிரவை எட்டியதால் மீட்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை மீண்டும் மீட்புப்பணி துவங்கியது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் நீண்ட தேடுதலுக்குப் பிறகு சாக்கடையில் இருந்து சடலத்தை மீட்டனர்.அவரது கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.