உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்கள் பாதுகாப்புக்காக 60 உதவி மையங்கள் திறப்பு

பெண்கள் பாதுகாப்புக்காக 60 உதவி மையங்கள் திறப்பு

பெங்களூரு: பெண்களின் பாதுகாப்புக்கு, கர்நாடகா காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரின், 60 இடங்களில் உதவி மையங்களை துவக்கியுள்ளது.இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், பாலியல் பலாத்காரம் உட்பட, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. பெண்களின் பாதுகாப்புக்கு, அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேவைப்பட்ட பகுதிகளில், உதவி மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.பெங்களூரின் 60 பகுதிகளில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள், மகளிர் விடுதிகள், ஐடி., நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.ரயிலுக்காக காத்திருப்போர், பஸ்களை தவற விட்டோர், நள்ளிரவு பெங்களூருக்கு வந்திறங்கும் பெண்கள், இந்த உதவி மையத்தில் ஓய்வு எடுக்க அனுமதி உள்ளது. இதற்காக உதவி மையங்களில், நான்கு படுக்கைகள், எல்.இ.டி., விளக்குகள், சீலிங் பேன், கழிப்பறை, குடிநீர், அவசர சிகிச்சை மருந்து பெட்டி என, அனைத்து வசதிகளும் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை