மேலும் செய்திகள்
குழப்பத்தில் காங்., தலைவர்கள்!
2 hour(s) ago | 7
இலக்கிய பெருமன்ற பாரதி விழா
2 hour(s) ago
ஆல்பா பள்ளி மாணவி சாதனை
3 hour(s) ago
போலீஸ் மக்கள் மன்றத்தில் 46 புகார்களுக்கு நடவடிக்கை
3 hour(s) ago
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் முதன்முறையாக, அரசியலமைப்பு முகப்பு உரையை வாசித்து கூட்டத்தொடர் துவங்கப்பட்டது.பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது பேசுவது வழக்கம். சபாநாயகர் வாசிப்பு
ஆனால், இம்முறை சட்டசபை கூட்டம் நேற்று காலை துவங்கியதும், சபாநாயகர் காதர் அரசியலமைப்பு முகப்பு உரையை வாசிப்பதாக அறிவித்தார். அனைத்து உறுப்பினர்களுக்கும், அரசியலமைப்பு முகப்பு உரை வழங்கப்பட்டது. சபாநாயகர் வாசித்ததை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஊடகத்தினர் அதே போன்று வாசித்தனர்.சட்டசபையில் அரசியலமைப்பு முகப்பு உரை வாசித்து, கூட்டத்தொடர் துவங்கியது இதுவே முதன்முறை.இனி ஒவ்வொரு முறையும் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, அரசியலமைப்பு முகப்பு உரை வாசிப்பதற்கு, சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.இதுபோன்று முதன் முறையாக, ஏ.ஐ., எனும் செயற்கை தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு
இதன் மூலம், ஒவ்வொரு உறுப்பினரும் எத்தனை மணிக்கு சட்டசபை வளாகத்திற்குள் வருகிறார்; எவ்வளவு நேரம் இருக்கிறார்; எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் போன்ற முழு தகவலும் சட்டசபை அலுவலகத்துக்கு சென்றுவிடும்.எனவே, அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் உரிய நேரத்தில் ஆஜராகி, விவாதங்களில் பங்கேற்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.
2 hour(s) ago | 7
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago