உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்த பாகிஸ்தான் துடிக்கிறது: மோடி

ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்த பாகிஸ்தான் துடிக்கிறது: மோடி

பலாமு: “காங்கிரஸ் இளவரசர் ராகுல், நம் நாட்டின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் அரசு பிரார்த்திக்கிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 13ல் துவங்கி, அடுத்த மாதம் 1 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.இங்குள்ள பலாமு தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்., - எம்.பி., ராகுலின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார். அவர் பேசியதாவது:எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது எப்படி என்று புதிய இந்தியாவுக்குத் தெரியும்.

நடவடிக்கை

பா.ஜ., ஆட்சியில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் அதிர்ந்துபோன பாகிஸ்தானிய தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால், நமது வலிமையான தேசமோ, நிலையான, வலிமையான அரசையும், தலைவரையும் விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக, அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கட்சியும், இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும், உங்கள் நிலங்களை அபகரிக்க விரும்புகின்றன. எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பறிக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் அவர்கள் நினைக்கின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை காங்கிரசின் எந்த திட்டத்தையும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை; சைக்கிள் கூட இல்லை. ஆனால், ஊழல் நிறைந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துக்களை சேர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டு

முன்னதாக பீஹாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில், 60க்கும் மேற்பட்ட கரசேவகர்களை உயிருடன் எரிக்க காரணமாக இருந்தவர்களை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் காப்பாற்றியதாக குற்றஞ்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
மே 05, 2024 06:58

அதெப்படி, பிஜேபி கட்சி தேர்தல் பாத்திரம் முலம் பாக்கிஸ்த்தான் தொழிலதிபரிடம் இருந்து பணம் பெற்று அவருக்கு ஒரு காண்ட்ராக்ட் கொடுத்துள்ளதே


RAJ
மே 05, 2024 01:57

அய்யா பாக்கிஸ்தான் ஒரு சப்ப நம்ப எதிர்கொள்ளவேண்டியது சப்ப மூக்கு சீனாக்காரன,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை