உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயலில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஓய்வூதியம் கிடைக்காத பெண்கள் கண்ணீர்

தங்கவயலில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஓய்வூதியம் கிடைக்காத பெண்கள் கண்ணீர்

தங்கவயல்: மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், 'மாத பென்ஷன் கிடைக்க வில்லை' என்று பெண்கள் பலரும் கண்ணீருடன் புகார் செய்தனர்.தங்கவயல், ராபர்ட்சன் பேட்டை மினி விதான் சவுதா வளாகத்தில் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில், எஸ்.பி., சாந்தராஜு, தாசில்தார்நாகவேணி முன்னிலையில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடந்தது. தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்தோர்மனு அளிக்க வந்திருந்தனர். இதில் முதியோர் பென்ஷன், குடும்ப தலைவி உதவித்தொகை, ரேஷன் கார்டுகள், நில தகராறு ஆகியவைகளே அதிகமாக இருந்தன. நகரப் பகுதியில் பல பிரச்னைகள் இருந்தும் கூட இந்த நிகழ்ச்சியில் 5 சதவீதம் பேர் கூட பங்கேற்க வில்லை.இந்நிகழ்ச்சியில், ரூபகலா பேசியதாவது:தங்கவயல் தாலுகாவுக்குஉட்பட்ட அனைத்து துறைகளின் அலுவலகங்களும் ஒரே இடத்திற்கு வந்துள்ளது. பொதுமக்கள் பிரச்னைகளில், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தீர்வு காண வேண்டும். பெரும்பாலானவர்கள் ரேஷன் கார்டு பிரச்னைகள் சம்பந்தமாக இங்கு வருகின்றனர். அவர்களை இழுத்தடிக்காமல் தீர்வு காண வேண்டும்.போலீசார், பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.கஞ்சா அதிகரிப்பை, திருட்டை, ரவுடிகளைதடுக்க வேண்டும். போலீசார் சேவை பொது மக்களுக்கு தேவை. ஏழைகளை, விவசாயிகளை பயமுறுத்தி மிரட்ட வேண்டாம். அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.சில ஆண்டுகளுக்கு முன் தங்கவயல்எஸ்.பி., அலுவலகம், புதிய விஜயநகர் மாவட்டத்துக்கோ அல்லது கோலாருக்கோ இடம் பெயர இருந்தது. ஆனால், அது தடுக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இங்குள்ள எஸ்.பி., அலுவலகம் இடம் மாற வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இங்கு 973 ஏக்கரில் தொழிற் பூங்கா அமைய உள்ளது. அவைகளுக்கு பாதுகாப்பு மிக அவசியம்.இங்கு போலீஸ் பயிற்சி மையம் அமைய உள்ளது. அதற்காக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.ஆர்.டி.ஓ., அலுவலகமும் அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது.தங்கவயலில் பொதுப்பணி துறையின் சப் - டிவிஷன் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்l சின்னாகன ஹள்ளி கண்ட்லம்மா என்ற பெண் கூறுகையில், ''மாதந்தோறும் வரும் பென்ஷன் வரவில்லை. அதுதான் மருந்து, மாத்திரைகள் வாங்க உதவியாக இருந்தது,'' என்று கண்ணீரோடு தெரிவித்தார். அவரின் கோரிக்கையை விரைந்து கவனிக்க தாசில்தார் நாகவேணி உத்தரவிட்டார்l 'குடும்ப தலைவிக்கு அரசு வழங்கிய பணம் கிடைக்குமா. தேர்தலுக்கு பிறகு அந்த பணம் வரும் வரும் என காத்திருக்கிறோம். கிடைக்குமா. அவ்வளவு தானா' என்றும் பலர் கேட்டனர்l என்.ஜி.ஹுல்கூர் கிராமத்தின்முனியம்மா, ''சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,'' என கேட்டார்l ராஜப்பா என்பவர், ''எஸ்.சி.,க்களுக்கு மயானத்துக்கு இடம் வேண்டும்,'' என்றார்l சோமசேகர ரெட்டி என்பவர், ''கேசம்பள்ளியில்மருத்துவ வசதி வேண்டும்,''' என்று கோரினார்l கிரண் ராஜ் என்பவர், ''தனியார் பள்ளிகள் வர்த்தக நிறுவனங்களாக மாறியுள்ளன. அவற்றுக்கு கடிவாளம் போட வேண்டும்,'' என்று புகார் செய்தார்.� மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மனு அளிக்க குவிந்த கூட்டம். �  எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் முறையிட்ட பெண்கள். இடம்: மினி விதான் சவுதா, ராபர்ட்சன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை