உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான விற்பனை தடை எதிர்த்த மனு தள்ளுபடி

மதுபான விற்பனை தடை எதிர்த்த மனு தள்ளுபடி

பெங்களூரு: ஆசிரியர், பட்டதாரி தொகுதி ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மதுபான விற்பனைக்கு, தேர்தல் கமிஷன் விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.கர்நாடக மேலவையில் மூன்று ஆசிரியர், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜூன் 6ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.இதை முன்னிட்டு, நேற்று முதல் 6ம் தேதி வரை கர்நாடகா முழுதும் மதுபானம் விற்பனை செய்ய தடை விதித்து, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து, மதுபான கடை உரிமையாளர் குஷால் ராஜ், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், ''தேர்தல் கமிஷனின் உத்தரவை உறுதி செய்தார். அதே வேளையில், பார் மற்றும் ரெஸ்டாரென்டுகளில் உணவு வினியோகிப்பதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது.''மாநில கலால் துறை விதிகளின்படி, தேர்தலை அமைதியாக நடத்த, மதுபான விற்பனைக்கு தடை விதிக்க, மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை