கட்டங்கள் ஆய்வு பணி :மா.க.வாரியம் முடிவு
பெங்களூரு:சட்டவிரோத பட்டியலில் சேர்க்கப்பட்ட, மஹாதேவபுரா மண்டலத்தின் 19 கட்டடங்களை, ஆய்வு செய்ய கே.எஸ்.பி.சி.பி., திட்டமிட்டுள்ளது.இது குறித்து, கே.எஸ்.பி.சி.பி., எனும் கர்நாடக மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கட்டடங்களில் இருந்து, சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், ஏரிகளில் சேராமல் பார்த்து கொள்வது, கே.எஸ்.பி.சி.பி.,யின் கடமையாகும். கட்டடங்களில் அனுமதி பெற்றதை விட, கூடுதல் மாடிகள் கட்டப்பட்டுஉள்ளன. இதில் வீடு, கழிப்பறை, குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரிகளில் கலந்து தண்ணீர் அசுத்தமாகிறது.மஹாதேவபுரா மண்டலத்தின், 19 கட்டடங்கள் சட்டவிரோதமானவை என, மாநகராட்சி பட்டியலிட்டு உள்ளது. இந்த கட்டடங்களை ஆய்வு செய்ய கே.எஸ்.பி.சி.பி., முடிவு செய்துஉள்ளது. இங்குள்ள பல கட்டடங்களின் கழிவு நீர், எலேமல்லப்பா ஷெட்டி ஏரியில் கலக்கிறது. எனவே இந்த கட்டடங்களை ஆய்வு செய்கிறோம்.செப்டம்பரில் ஆய்வு துவங்கும். கழிவு நீர் ஏரியில் கலப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.