உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெங்கு அதிகரிப்பு நிலையில் பிளேட்லெட் பற்றாக்குறை

டெங்கு அதிகரிப்பு நிலையில் பிளேட்லெட் பற்றாக்குறை

பெங்களூரு: கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலையில், 'பிளேட்லெட்'டுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் தினமும் 30 யூனிட் பிளேட்லெட் தேவைப்படுகிறது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவில் டெங்கு நோய் ஏறுமுகமாகிறது. இதன் விளைவாக பிளேட்லெட் தேவை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அரசு, தனியார் மற்றும் சொசைட்டி உட்பட, 250 க்கும் அதிகமான ரத்த சேகரிப்பு வங்கிகள் உள்ளன. சில மாவட்டங்களில் தினமும் 30 யூனிட் பிளேட்லெட் தேவைப்படுகிறது.ரத்த சேகரிப்பு வங்கிகளில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு, பிளேட்லெட் வழங்கப்படுகிறது. தற்போதைய புள்ளி - விபரங்களின்படி, பெங்களூரு ரூரல் மாவட்டத்துக்கு, 161 யூனிட் பிளேட்லெட் வழங்கப்பட்டது. பெங்களூரு நகருக்கு 24 யூனிட், சிக்கமகளூருக்கு 32, தார்வாடுக்கு 37, ஹாசனுக்கு 61, கொப்பாலுக்கு 24 யூனிட் பிளேட்லெட் வினியோகிக்கப்பட்டது.சில மாவட்டங்களில், பிளேட்லெட் சேமிப்பு வங்கி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், ஆறு யூனிட் பிளேட்லெட் காலாவதியாகி விட்டது. சுகாதாரத் துறை அதிகாரிகள், அன்றாடம் தேவைப்படும் பிளேட்லெட், எவ்வளவு இருப்புள்ளது என்பது குறித்து, தகவல் தெரிந்து கொள்கின்றனர்.மாநிலத்தில் தற்போது பிளேட்லெட் பற்றாக்குறை இல்லை. ஆனால் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதால், அந்தந்த மாவட்டங்களில், மூத்த டாக்டர்களை நியமித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ