உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.கூட்டம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை டில்லியில் பா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் மத்திய நிதி அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ. நிர்வாகிகள் வந்தனர். இக்கூட்டத்தில் பா.ஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 21:05

மோடி இனியாவது திருந்தி, ஆலோசனைகளை உண்மையாகவே நடத்துவாரா ? நிதி ஆயோக் என்கிற ஜால்ரா கூட்டம் நடத்தி, மற்ற காட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களுக்கு, துரோகம் செய்தால் வரும் மாநில தேர்தலில் மக்கள் பொய் ஜே பி யை துரத்தி அடிப்பார்கள், எந்த புள்ளி விபரமும் உண்மை இல்லை என்று எதிர் காட்சிகள் மட்டுமல்ல, வெளி நாட்டு பொருளாதார பத்ரிக்கைகள் சொல்வதற்கு பதில் என்ன ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 27, 2024 21:54

தசரதன் திருந்தவேண்டியது உங்களைப்போல ஊழல்வாதிகளுக்கு சோம்புத்தூக்கும் ஹிந்துக்கள். ஊழல் செய்யாத குடும்பத்திற்கு சொத்து சேர்க்காத மோடிஜி அல்ல. வெளிநாட்டு பொருளாதார பத்திரிக்கைகள் சொன்னால் அனைத்தும் உண்மை ஆகிவிடுமா? இதுவரை சொன்னவை ஏதும் நடக்கவில்லையே? திருடர்களுக்கு ஆதரவாக செயல்படும் உங்களை போன்ற அறிவாளிகள் தான் திருந்தவேண்டும்.


Palanisamy Sekar
ஜூலை 27, 2024 20:20

இந்தியாவுக்கு எதிராக உள்ள பல நாடுகளின் அமைப்புகள் தொடர்ந்து மோடியின் ஆட்சியை இங்கே இந்தியாவில் சகட்டுமேனிக்கு ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்துவருகின்றார்கள்.அதற்குரிய நிதியை காங்கிரஸ் கட்சி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பாராளுமன்ற தேர்தலில் அப்படிப்பட்ட நமது தேசத்துக்கு விரோதிகளுடன் சேர்ந்துதான் காங்கிரஸ் பணப்பிரச்சினையே இல்லாமல் திமுகவை போல பணப்பட்டுவாடா செய்து வெற்றிபெற்றுள்ளார்கள். இதனையெல்லாம் மோடிஜி அவர்கள் தெளிவாக எடுத்து சொல்லி அந்தந்த மாநிலங்களில் மோடிஜியின் ஆட்சியின் சலுகைகளை மக்களுக்கு சென்றடையும்படி செயல்பட வேண்டும். ஆனால் இப்போது நமது எதிரிகள் அனைவரும் மோடிஜியின் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு செயல்பட காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் வெகு வேகமாக செய்து அனுபவிக்கின்றார்கள். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு பாஜக ஆட்சி செய்கின்ற மாநில முதல்வர்கள் உடனே செயல்படடு உரியவர்களுக்கு சலுகைகள் கடன் உதவிகள் பெற்றுத்தர செயல்பட வேண்டும். எதிரிகள் தான் தற்போது அணைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள். உதாரணம் தமிழக திமுகவில் பலரும் பிறரை காட்டிலும் மோடிஜியின் கடன் சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் என்கிறது செய்திகள்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 27, 2024 21:58

உண்மைதான், நீங்கள் சொன்னது போல் திமுகவினர், மத்திய அரசு திட்டங்களை இவர்கள் செய்வது போல் மக்களை ஏமாற்றுகிறார்கள். பிஜிபியினர் முகநூலில் மட்டுமே உதார் காட்டுகின்றனர். மோடிஜியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வது இல்லை.


GlobalTimes
ஜூலை 27, 2024 19:49

உயர் திரு மோடி அவர்களின் ஆலோசனை தெளிவானதாகவே இருக்கும் .நன்றி ....நன்றி


மேலும் செய்திகள்