உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு: மக்களுக்கு ஆறுதல்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு: மக்களுக்கு ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 10) ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xionxp9f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 10) கேரளா வந்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் உடன் கண்ணணூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்.Gallery

கலந்துரையாடல்

30 மணி நேரத்தில் ராணுவத்தினர் அமைத்த பெய்லி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை கட்டமைத்தவர்களுடன் கலந்துரையாடினார். வெள்ளாரமலை பாலத்தையும் ஆய்வு செய்தார்.

நேரில் ஆய்வு

இதன் பிறகு, முண்டக்கை, சூரமலை பகுதிகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது கவர்னர் ஆரிப்கான், அமைச்சர் சுரேஷ்கோபி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மோடியிடம் விளக்கம் அளித்தனர்.

ஆறுதல்

சூரல்மலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

ஆய்வு

தொடர்ந்து, நிலச்சரிவு பாதிப்பு குறித்து வயநாட்டில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என மோடி உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAJ
ஆக 10, 2024 17:21

வெளிநாட்ல, where are you from னு கேரளா மக்கள்கிட்ட கேட்ட ,.. I am from India னு சொல்லமாட்டாங்க.. I am from kerala னுதான் சொல்லுவாங்க.. உங்க கமண்ட்க்கு பதில் கிடைச்சுருச்சா?


venugopal s
ஆக 10, 2024 16:50

மத்திய பாஜக அரசு கேரளாவுக்கு எல்லா உதவிகளையும் செய்வார்கள், நிதியுதவி தவிர!


Veeraraghavan Jagannathan
ஆக 10, 2024 15:11

கேரளா மக்களும் இந்தியர்களே.


ديفيد رافائيل
ஆக 10, 2024 15:40

கேரள மக்கள் அப்படி நினைப்பதில்லையே.


Mettai* Tamil
ஆக 10, 2024 16:39

இந்தியர் என்ற மனப்பான்மை இருந்தால் , இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரே சட்டத்தை ஏற்கலாமே .அதில் ஏன் முரண்பட்டு மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க .........


RAJ
ஆக 10, 2024 15:07

எல்லா டிவிலியும் வளைச்சு வளைச்சு காமிச்சுட்டாங்கலே. இன்னும் என்னத்த பாக்க ...முடியல..


ஆரூர் ரங்
ஆக 10, 2024 13:00

தற்கொலைக்கெல்லாம் இன்ஷூரன்ஸ் கிடைக்காது. மாநில அரசால் ஏற்பட்ட இயற்கை அழிவிற்கு இழப்பீடு கேட்பதை பினராயி மறந்து விடலாம்.


கூமூட்டை
ஆக 10, 2024 12:48

இது தான் மோடி ஜி மாடல். எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்று நினைக்க வேண்டும்


P. VENKATESH RAJA
ஆக 10, 2024 12:35

கேரள மக்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ