உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி: முழு ஆல்பம் இதோ!

பாட்னா: பாட்னா சாஹிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார்.புகழ்பெற்ற சீக்கியர்களின் புனிதத் தலமான ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாரா. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடத்தைக் குறிக்கும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் தக்த்தின் கட்டுமானம் நியமிக்கப்பட்டது.தேர்தல் பிரசாரம் செய்ய இன்று (மே 13) பீஹாருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பாட்னா சாஹிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்கு சென்று, பிரதமர் மோடி சப்பாத்தி தயார் செய்தார். பிரதமர் மோடி உணவு பரிமாறி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
மே 13, 2024 20:04

கர்ம யோகிக்கு இறைவன் அருள் என்றும் பரிபூரணமாக உண்டுசான்றோனேபெரியோனே இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் நீடூழி வாழ, பாரதத்தின் உண்மையான பிதாமகன் ஆக திகழ எங்கும் நிறைந்த பரம்பொருள் அருள்வாராகஓம் தத்சத்


சுப்பு
மே 13, 2024 19:05

ஒருத்தர் மக்களோடு பஸ்ஸில்.போனால்.இன்னொருத்தர் வெறும் அண்டாவைக் கிண்டுறாரு


Mohan
மே 13, 2024 23:03

வெறும் அண்டாவை கிண்டினால் ஒரு தவறும் இல்லை ஒன்றும் இல்லாத அண்டாவை கிளறி, சிறுபான்மையினரை காப்பாற்றுவதாக கூறி ஏமாற்றி, நாட்டில் பிரிவினை வாதத்தை முழுமூச்சாக தூண்டிவிடும் காங்கிரஸ் விடியல்களின் சம்பள வேலையாளே சற்று மூடிக்கொண்டிருக்கவும்வாயை


Rajinikanth
மே 13, 2024 15:10

"முழு ஆல்பம் இதோ" - இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா


Prabhakaran Rajan
மே 13, 2024 12:07

ஜெய் ஸ்ரீராம், கடவுளுக்கு நன்றி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை