உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் மீதான பாலியல் புகார்: சிசிடிவி பதிவு கேட்கும் போலீஸ்

கவர்னர் மீதான பாலியல் புகார்: சிசிடிவி பதிவு கேட்கும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது, தற்காலிக பெண் பணியாளர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து, அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை தங்களிடம் தரும்படி, கவனர் மாளிகைக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இதை கவர்னர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.கவர்னருக்கு எதிராக அவதுாறு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மாநில போலீசார், கவர்னர் மாளிகைக்குள் நுழைய நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு விசாரணை குழுவை மாநில போலீசார் அமைத்துள்ளனர்.இது தொடர்பாக, அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:பொதுவாக யார் புகார் அளித்தாலும் அதன்படி விசாரணை நடத்தப்படும். இது, வழக்கமான நடைமுறை தான். புகார் அளித்த நபரிடம் முதலில் விசாரணை நடத்துவோம். இதேபோல், கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்ய உள்ளோம். இதற்காக அவற்றை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.வழக்கு விசாரணையின் போது, தேவைப்பட்டால் கவர்னர் மாளிகைக்குள் சென்று விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மே 05, 2024 12:12

முயல் பிடிக்கும் நாய் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும் என்ற பழமொழி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறதே!


தத்வமசி
மே 05, 2024 09:53

எதிர் கட்சிகளின் கடைசி ஆயுதம் பாலியல் புகார் பாவம் வேதனையின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள் போலும் வேறு எதையும் வைத்து சமாளிக்க முடியவில்லை கொள்ளை அடிக்க முடியவில்லை கொள்ளை அடித்தால் வெளியே வந்து விடுகிறது கட்சியை குடும்ப சொத்தாக மாற்றி, மாநிலத்தையே குடும்பத்தோடு கொள்ளை அடிக்கும் இந்த கும்பல்கள் இந்தியா முழுக்க பரவி உள்ளனர் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது இரண்டு குடும்ப கட்சிகள் உள்ளன அவர்களுக்கு கீழே மாவட்டம் தோறும் குட்டி ராஜாக்களாக, ஜமீந்தார்களாக ஒரு கூட்டம் இப்படித்தான் கட்சி நடத்துகின்றனர் இதற்காகவா சுதந்திரம் பெற்றோம் ?


தாமரை மலர்கிறது
மே 05, 2024 02:58

கவர்னர் அப்பழுக்கற்றவர் சிறந்த தேசப்பற்றாளர் பிஜேபிக்காரர் குற்றம் செய்திருக்க ஒரு துளிகூட சாத்தியமில்லை அபாண்டகுற்றச்சாட்டுகளை மக்கள் மற்றும் கோர்ட் பொருட்படுத்தாது வர்னரின் கௌரவதை குறைக்கும் வகையில் கொடுக்கவேண்டிய அவசியமில்லை அது தனிமனித சுதந்திரம்


Kasimani Baskaran
மே 05, 2024 00:17

டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய ஆட்சியை விட்டு வைத்தால் இன்னும் ஏறாளமாக சேற்றை வாரி வீசத்தான் செய்வார்கள்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ