உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -பிரபல ஆர்.ஜே. சிம்ரன் குருகிராமில் தற்கொலை

-பிரபல ஆர்.ஜே. சிம்ரன் குருகிராமில் தற்கொலை

குருகிராம்:ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பிரபல ரேடியோ ஜாக்கி சிம்ரன் சிங், ஹரியானா மாநிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜம்முவைச் சேர்ந்த ஆர்.ஜே., சிம்ரன் என அழைக்கப்படும் சிம்ரன் சிங், 25, ரேடியோ நிகழ்ச்சி தொகுபாளார். ரேடியோவில் மட்டுமின்றி, 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் 6 லட்சம் ரசிகர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கினார். குருகிராம் 47வது செக்டார் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பருடன் வசித்த அவர், நேற்று முன் தினம் தன் அறையில் தூக்கில் தொங்கினார். அவருடன் வசித்த நண்பர் கொடுத்த தகவல்படி, போலீசார் வந்து சிம்ரன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூறு ஆய்வுக்குப் பின், அவரது குடும்பத்தினரிடம் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது.இன்ஸ்டாகிராமில் கடந்த 13ம் தேதி 'ரீல்' ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.ஜம்முவின் ரசிகர்கள் சிம்ரனை 'ஜம்மு கி தட்கன்' என அழைத்தனர்.ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர், சிம்ரன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை