மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
47 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
58 minutes ago
பெங்களூரு, : பலாத்கார வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹாசன் ம.ஜ.த., - - எம்.பி.,யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்குகள், பாலியல் தொல்லை வழக்கினால், மே 31ம் தேதி நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிய வந்துள்ளது.இவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனால், நீதிமன்ற அனுமதியுடன், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.ஊடகத்தினருக்கு தெரியாமல், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மூன்று மணி நேர பரிசோதனைக்கு பின், அழைத்து சென்றுள்ளனர். இன்று காலை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தவும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.அவரது காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.கூடுதல் விசாரணைக்கு மீண்டும் தங்கள் காவலுக்கு ஒப்படைக்கும்படி கேட்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.
47 minutes ago
58 minutes ago