உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் வீடியோ அமைச்சர் பாட்டீல் டவுட்

பிரஜ்வல் வீடியோ அமைச்சர் பாட்டீல் டவுட்

விஜயபுரா : ''ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள், புதியதா அல்லது பழையதா,'' என தொழிற் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி எழுப்பினார்.விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:பொறுப்பான எம்.பி., பதவியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, இத்தகைய இழிவான செயலை செய்வதா. இவர் ஒரு சைக்கோ. 2,000 முதல் 3,000 வீடியோக்கள் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த வீடியோக்கள் புதியதா அல்லது பழையதா.ஆபாச வீடியோ வழக்கை, மாநில அரசு தீவிரமாக கருதுகிறது. ஏற்கனவே எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. பிரஜ்வலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இல்லை என்றால் அவர் எந்த பாதாளத்தில் இருந்தாலும், தேடி அழைத்து வந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை