உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பெண்ணுக்கு கொடுமை நடந்தால் விட மாட்டோம்"- என்கிறார் பிரியங்கா

"பெண்ணுக்கு கொடுமை நடந்தால் விட மாட்டோம்"- என்கிறார் பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'எந்த ஒரு பெண்ணுக்கு எங்கும் கொடுமை நடந்தால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்' என நிருபர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணியில், பிரியங்கா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் பிரதமரை பொதுமக்கள் மத்தியில் பார்த்ததில்லை. இந்திரா பிரதமராக இருக்கும் போது, மக்களை நேரில் சந்திப்பார். ஆனால் பிரதமர் மோடி தனது வாகனத்தில் இருந்து பொதுமக்களை நோக்கி கை அசைப்பார். அவர் மேடையில் இருந்து கீழே வரமாட்டார். தற்போது, ஹிந்து, முஸ்லிம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அவர்கள் (பா.ஜ.,) அரசியல் செய்வது, இதை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

பெண்ணுக்கு கொடுமையா?

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறுவது, குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'எந்த ஒரு பெண்ணுக்கு எங்கும் கொடுமை நடந்தால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம். நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. இது குறித்து ஆம் ஆத்மி விவாதித்து முடிவெடுக்கும். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள், விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர்கள் பேச வேண்டும்' என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajasekar Jayaraman
மே 17, 2024 11:51

நவகாலியில் இருந்து உங்கள் முப்பாட்டன் ஆட்சியிலிருந்து நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.


கண்ணன்
மே 17, 2024 06:30

அம்மணி, முதலில் ஸவாதி மலிவால் பட்ட கொடுமைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?


M Ramachandran
மே 16, 2024 21:09

அம்மணி உங்கள் கொள்ளு தாத்தா முதல் இப்பொது இருக்கும் குடும்ப கும்பலல் வரை நாட்டிற்கு எவ்வளவு தீங்கிழைத்தீர்கள் என்று தர்போது தான் தெரிய வந்துள்ளது நீங்கள் ஒன்றும் செய்யாமல் கொள்ளையடித்து சேர்த்த இருக்கிற பணத்தை எண்ணிக்கொண்டு காலம் தள்ளுங்கள் மக்களுக்கு மிக உபயோகமாகா இருக்கும்


G.Kirubakaran
மே 16, 2024 20:40

எங்கே பெண்ணுக்கு கொடுமை நடந்தால் கூட இருப்போம், என்று சொல்லி விட்டு ஆம் ஆத்மீ கட்சி பெண்ணுக்கு நடந்த கொடுமை அந்த கட்சி பார்த்துக்கொள்ளும் என்கிறார்


Ramesh Sargam
மே 16, 2024 19:37

அப்ப, ஆண்களுக்கு கொடுமை நடந்தால் பரவாயில்லையா? ஏன் இந்த கெட்ட எண்ணம்? ஆண்கள் என்ன பாவம் செய்தனர்?


B.Eswaran
மே 16, 2024 18:50

அப்படியே தமிழ் நாட்டுக்கு வாங்க அப்போ நீங்க யாருன்னு நல்லா தெரிந்து விடும்


Naagarazan Ramaswamy
மே 16, 2024 17:56

ஆம் ஆதமி கேஜ்ரிவாலிடம் முதலில் பேசி சரிசெய்யட்டும்


Sainathan Veeraraghavan
மே 16, 2024 17:53

காங்கிரஸ் கட்சியும் , அதன் தலைவர்களும் ஆதங்கத்தில் உளறுகிறார்கள் காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்பட வேண்டிய கட்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை காங்கிரஸ் இல்லை


என்றும் இந்தியன்
மே 16, 2024 17:44

பெண்ணுக்கு கொடுமை நடந்தால் விட மாட்டோம்"- என்கிறார் பிரியங்கா


UTHAMAN
மே 16, 2024 17:32

நேற்று தானே ஒரு ஆம்ஆத்மி எம்பி கெஜ்ரிவாலால் தாக்கப்பட்டார் தற்போது கூவுகிறார்


மேலும் செய்திகள்