உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்ணாடி தடுப்பு பொருத்த திட்டம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்ணாடி தடுப்பு பொருத்த திட்டம்

பெங்களூரு: பயணியர் தற்கொலையை தடுக்க, பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் கண்ணாடி தடுப்பு பொருத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. செல்லகட்டா - ஒயிட்பீல்டு; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஒருபக்கம் மெட்ரோ ரயிலுக்கு மவுசு அதிகரிக்கிறது. இன்னொரு பக்கம், மெட்ரோ ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன.தண்டவாளத்தில் விழுந்த மொபைல் போனை எடுக்க இளம்பெண், தண்டவாளத்தில் குதித்தது; நான்கு வயது குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்தது; மெட்ரோ ரயில் முன் பாய்ந்து, சட்ட கல்லுாரி மாணவர் உட்பட இருவர் தற்கொலை செய்தது என்று, சமீபகாலமாக விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன.மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், பயணியர் தற்கொலை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு, பயணியரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில், நடைமேடையில் கதவுகளுடன் கூடிய கண்ணாடி தடுப்பு பொருத்த, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ரயில் வந்து நின்ற பின் தான், கண்ணாடி கதவுகள் திறக்கும். ரயில் சென்ற பின், மீண்டும் கதவு அடைத்துக் கொள்ளும். தற்போது பெங்களூரில் 66 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், கண்ணாடி தடுப்பு பொருத்த ஆறு கோடி ரூபாய் முதல் ஏழு கோடி ரூபாய் வரை, செலவு ஆகும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.கண்ணாடி தடுப்பு பொருத்தும் பணி துவங்கப்பட்டால், மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ