உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளுக்கு சொத்து எழுதி தந்த தாயை கொன்ற மகனுக்கு காப்பு

மகளுக்கு சொத்து எழுதி தந்த தாயை கொன்ற மகனுக்கு காப்பு

துமகூரு : துமகூரு பாவகடா டவுன் மாச்சமாரனாய் பகுதியில் வசித்தவர் சந்திரக்கா, 50. கடந்த 20ம் தேதி இரவு, வீட்டின் அருகே இறந்து கிடந்தார். தாயை யாரோ கொன்று விட்டதாக கூறி, சந்திரக்கா மகன் ஆஞ்சநேயலு, 30 போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், ஆஞ்சநேயலு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தாயை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். ஆஞ்சநேயலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனால், சந்திரக்கா தனது பெயரில் உள்ள சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைத்தார். இதனால், ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை