உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம்

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம்

புதுடில்லி,:வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெறும் வன்முறையை கண்டித்து, டில்லியில் நேற்று ஹிந்து அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது.மண்டி ஹவுஸிலிருந்து தொடங்கி ஜந்தர் மந்தரில் இந்த பேரணி முடிவடைந்தது. இதில் பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ டி.பண்டிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ., தலைவர் நுபுர் சர்மாவும் பங்கேற்றார்.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோஷமிட்டவாறு, போராட்டக்காரர்கள், மதக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். பெரும்பாலானோர் தங்கள் வாயை கறுப்பு பட்டையால் மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்