மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
லூதியானா:பத்மஸ்ரீ விருது பெற்ற பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் படர்,79, நேற்று காலமானார். பஞ்சாபி கவிஞரும் எழுத்தாளருமான சுர்ஜித் படர், லூதியானா பரேவல் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அவரது மனைவி பூபிந்தர் கவுர் நேற்று காலை 6:30 மணிக்கு அவரை எழுப்பினார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. டாக்டர் வந்து பரிசோதித்து அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.சுர்ஜித்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும்மகன் வந்த பின், நாளை உடல் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் கூறினர்.பஞ்சாப் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியுற்ற சுர்ஜித்துக்கு 2012ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவம் செய்தது. சாகித்ய அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.ஜலந்தர் மாவட்டம் படர் கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித், கபுர்தலா ரந்திர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். குருநானக் தேவ் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார். லூதியானா பஞ்சாப் வேளாண் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாபி நடிகர் குர்பிரீத் குக்கி, பாடகர் ஹர்பஜன் மான் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago