உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பட்ஜெட் ஜூலை 22 ல் தாக்கல்?

மத்திய பட்ஜெட் ஜூலை 22 ல் தாக்கல்?

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் துவங்கியதால், நிதி அமைச்சக அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதனிடையே, மத்திய பட்ஜெட் ஜூலை 22ம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது முறை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z0kuxlmm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, ஜூலை மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பட்ஜெட் தயாரிப்பு பணி மிக ரகசியமாகவே நடக்கும். இந்தாண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதால், நிதி அமைச்சகம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

சாதனை

ஏற்கனவே, ஐந்து முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என, ஆறு பட்ஜெட்களை தொடர்ந்து தாக்கல் செய்து, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்துள்ளார். தற்போது, ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, அந்தச் சாதனையை முறியடிக்க உள்ளார்.நாட்டின் முதல் பெண் ராணுவ அமைச்சர், முதல் பெண் முழுநேர நிதியமைச்சர் என, பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். மேலும், இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.தற்போது மத்தியில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் சமபலத்தில் உள்ளன. அதனால், அவருடைய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூன் 14, 2024 17:57

திருமதி நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது ஒரு மக்கள் நலன் சார்ந்த நல்ல பட்ஜெட் ஒன்றை வழங்குவாரா? இல்லை வழக்கம் போல் தானா?


saravanan
ஜூன் 14, 2024 15:01

நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு-செலவுக்கான ஆண்டறிக்கை மட்டுமல்ல அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும், வாக்குறுதிகளையும் பறைசாற்றுவது. தற்போதைய சுழலில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் நன்றாகவே இருக்கின்றன. மறைமுக வரி வருவாய் மாதம் இரண்டு லட்ச கோடியை தாண்டும் போலிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி புதிய அரசுக்கு இரண்டு லட்சம் கோடிக்கு மேல் தன்பங்காக அளிக்கவிருக்கிறது. எல்லாம் மகிழ்ச்சி தான் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் என்ன? விவசாயிகள் நலம் முக்கிய பங்காற்ற வேண்டும். விளைவிக்கப்பட்ட பொருளுக்கு இத்தனை சதவீத லாபம் என்பது விவசாயிகளால் வரையறுக்கபடுவதாக இருக்க வேண்டும். அதாவது price stabilization அல்லது price control mechanism உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நவீன தொலைதொடர்பு சாதனங்களையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தலாம். முக்கியமாக எரி பொருள் விற்பனையை சீரமைக்கலாம் rationalize. விவசாய பயன்பாட்டிற்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கலாம். இதன்மூலம் அத்தியாவசிய வேளான் விளைபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.


Rajarajan
ஜூன் 14, 2024 10:35

வழக்கம்போல, அரசு ஊழியருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இனிப்பான சம்பள உயர்வு, பஞ்சபடி உயர்வு, போனஸ், ஓய்வூதியத்தில் கூடுதல், இதர சலுகைகள் தருவீங்க. நஷ்டத்தில் அரசு நிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கினாலும், அவர்களுக்கும் இதே உரிமை உண்டு. ஆனால், தனியார் மற்றும் ஏழை பாழைக்கு இவையெல்லாம் நேரடி மற்றும் மறைமுக வரியா சுமையை தலையில சுமத்துவீங்க. இதானே வழக்கமான பட்ஜெட். நேரிடை விவாதத்துல கேட்டா, இதுக்கு உங்ககிட்ட பதில் இல்லைனு சொல்வீங்க. ஆகமொத்தம், மேற்சொன்னவங்களுக்கு அடுத்த நிதியாண்டில் சிரமம் வராம இருக்க, பட்ஜெட்ல நிதி ஒதுக்கிவெச்சிட்டு, மீதியை அங்க அங்க கொஞ்சம் கொஞ்சம் செலவு செய்வீங்க. ஆனாலும், பற்றாக்குறை பட்ஜெட் தான். மற்றவர்களுக்கு சுமை தான்.


Sampath Kumar
ஜூன் 14, 2024 09:56

நோகாமல நொங்கு தின்னும் கேவலமான கும்பல் தேர்தலை சந்திக்க திராணி அற்ற கும்பல் புறவாசல் வழியாக மட்டுமே அதிகாரத்தை திருடும் மட்டரகமான கும்பல் இதுகளை எல்லாம் நாடு ஆழ விட்டது யார்க்குற்றம் இந்த கேட்டு கேட்ட சுரணைற்ற மக்கள் குற்றம் இந்த அசிங்கம் இந்தியாவில் மாட்டமுமே சாத்தியம் சனாதன தர்மத்தின் படி வாழும் யோக்கியர்கள் அல்லவே a


ஆரூர் ரங்
ஜூன் 14, 2024 15:02

எந்த லோக்சபா தேர்தலில் ஜெயித்து உங்க மன்மோகன் நிதியமைச்சர் ஆனார்? இன்றுவரை மக்களை சந்தித்து வென்றதில்லை.


venkatakrishna
ஜூன் 14, 2024 07:15

நிர்மலா அவர்களுக்கும், சுயநலமில்லாத உழைப்புக்கும் பாராட்டுக்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை