உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தின்ன தின்ன திகட்டாத தைவான் இன கொய்யா ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு இது தான் பரிகாரம்

தின்ன தின்ன திகட்டாத தைவான் இன கொய்யா ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு இது தான் பரிகாரம்

தைவான் இன கொய்யா விளைவித்து, ராணிபென்னுார் விவசாயி ஒருவர், லாபத்தை அள்ளி வருகிறார்.ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுாரின் சுனேகல்லபிதரி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சப்பா சித்தப்பா சிரிகேரி, 70. அவருக்கு துணையாக அவரது மனைவி லலிதவ்வா வேலை செய்து வருகிறார்.

அதிக லாபம்

'நரேகா' திட்டத்தின் கீழ், கொய்யா சாகுபடி செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் இவருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, விஜயபுராவில் இருந்து கொய்யா மரக்கன்று வாங்கி வந்தார்.தனது ஒரு ஏக்கர் நிலத்தில், ஓராண்டுக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் செலவில், 8க்கு 8 இடைவெளியில் 515 தைவான் கொய்யா மரக்கன்றுகள் நட்டார்.இதுகுறித்து மஞ்சப்பாசித்தப்பா சிரிகேரி மற்றும் அவரது மனைவி லலிதவ்வா கூறியதாவது:தற்போது கொய்யா மரங்கள் காய்க்க துவங்கி உள்ளன. நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 கிலோ பழங்கள் விற்பனையாகின்றன. சாலையை ஒட்டி, எங்கள் விவசாய நிலம் உள்ளதால், இவ்வழியாக வருவோர், எங்களிடம் கொய்யாவை, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.இதனால் நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் இவ்வளவு வருமானம் வருவது இதுவே முதல் முறை.ஹாவேரி, ராணிபென்னுார், தாவணகெரே, ஹர்பனஹள்ளி மார்க்கெட்டில் இதற்கு 'டிமாண்ட்' உள்ளது.ஒவ்வொரு பெட்டிக்கும் விற்பனையாளர்களும் வயலுக்கு வந்து 500 ரூபாய் கொடுத்து எடுத்துச் செல்கின்றனர். ஏற்கனவே, 30,000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.ஒரு பயிருக்கான செலவு போக, 60,000 முதல் 70,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். ஆண்டுக்கு இரண்டு முறை கொய்யா விளைந்தால், ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.ஒருமுறை செலவழித்து, தைவான் இளஞ்சிவப்பு மரக்கன்றுகள் நட்டால், எட்டு ஆண்டுகளுக்கு பலன் தரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திட்டங்கள்

கொய்யா பயிர், சராசரி மண்ணிலும் குறைந்த நீரிலும் கூட அதிக மகசூல் தரும். தைவான் பிங்க் கொய்யா பழம், பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு இது தான் பரிகாரம்.உண்பதற்கு ருசியாகவும், இயற்கை உரம் பயன்படுத்துவதால், பழங்கள் அறுசுவையுடன் இருக்கும். இத்துறையில் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்கள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.தைவான் இன கொய்யாவுடன் விவசாயி மஞ்சப்பா சித்தப்பா சிரிகேரி, அவரது மனைவி லலிதவ்வா. இடம்: ராணிபென்னுார், ஹாவேரி- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்