உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலணி தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் வழங்கிய ராகுல்

காலணி தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் வழங்கிய ராகுல்

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அவதுாறு வழக்கில் ஆஜராவதற்காக, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூருக்கு சமீபத்தில் சென்றிருந்தார். லக்னோவுக்கு திரும்பும் வழியில், சுல்தான்பூரில், காலணி தைக்கும் தொழிலாளி, ராம் சைத்தை அவர் சந்தித்தார். அவருடைய தொழில் குறித்தும், குடும்ப நிலைமை குறித்தும் ராகுல் கேட்டறிந்தார். மேலும், காலணி ஒன்றை தைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.இந்நிலையில், அந்தத் தொழிலாளிக்கு உதவும் வகையில், தையல் இயந்திரத்தை ராகுல் அனுப்பி வைத்துள்ளார்.இது குறித்து காங்கிரஸ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:சுல்தான்பூரில், காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத்தை, ராகுல் சந்தித்தார். அவருடைய ஏழ்மையை உணர்ந்த ராகுல், அவருக்கு உதவும் வகையில், தையல் இயந்திரத்தை அனுப்பி வைத்துள்ளார். இதன் வாயிலாக, ராம் சைத் தன் தொழிலை சிறப்பாக செய்ய இயலும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை