உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நர்ஸ் படுகொலை: இளைஞர் கைது

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நர்ஸ் படுகொலை: இளைஞர் கைது

ருத்ரபூர்: உத்தரகண்டின் நைனிடாலில் உள்ள தனியார் மருத்துவமனையில், 33 வயதான நர்ஸ் ஒருவர் பணியாற்றி வந்தார். அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் தன் மகளுடன் இவர் வசித்து வந்தார்.

மொபைல்போன் சிக்னல்

கடந்த மாதம் 30ம் தேதி இரவு வழக்கம்போல் பணி முடித்து தன் வீட்டிற்கு புறப்பட்டார். நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது சகோதரி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கமாக, அவர் பணி முடித்து வரும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பின் அவர் மாயமானதை போலீசார் கண்டறிந்தனர். கடந்த 8ம் தேதி, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தியபோது, அங்குள்ள புதரில் முகம் சிதைந்த நிலையில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த பரிசோதனையில், நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே, அவர் பயன்படுத்திய மொபைல்போன் சிக்னல் ராஜஸ்தானில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு உத்தர பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள தர்மேந்திர குமார், உத்தரகண்டின் கதர்பூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவம் நிகழ்ந்தபோது மது போதையில் இருந்து உள்ளார்.

கொள்ளை

அவருக்கு பணம் தேவை இருந்ததால், அப்போது அவ்வழியாக வந்த நர்சிடம் கொள்ளைஅடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவர் கூச்சலிட முயன்றதால் வலுக்கட்டாயமாக அங்குள்ள புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், நர்சின் தலையில் கல்லைப் போட்டு முகத்தை சிதைத்துள்ளார். அதன்பின் அவரது மொபைல் போன், நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு, அவரை கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி