உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., விமான நிலையத்துக்கு தனி விமான கீதம் வெளியீடு

பெங்., விமான நிலையத்துக்கு தனி விமான கீதம் வெளியீடு

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கென பல கிராமிய விருதுகள் பெற்ற ரிக்கி கேஜ் இசையமைத்த, 'ஏர்போர்ட் கீதம்' கன்னடம், ஆங்கில பாடலை, நேற்று விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டது.நாட்டிலேயே டில்லி, மும்பைக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் அதிக மக்கள் வந்து செல்லும் விமான நிலையமாக, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.இத்தகைய விமான நிலையத்தின் கிரீடத்துக்கு மற்றொரு வைரமாக, 'ஏர்போர்ட் கீதம்' பாடலை, விமான நிலைய நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.இதற்கு, இந்தோ - அமெரிக்க இசையமைப்பாளரும், மூன்று கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ் இசையமைத்து உள்ளார். கன்னடம், ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. கன்னடத்தில் பாடகர் சித்தார்த்தாவும்; ஆங்கிலத்தில் பல கிராமிய விருதுகள் பெற்ற லோனிபார்க் ஆகியோர் பாடி உள்ளனர்.இந்த பாடலின் வீடியோவில், பெங்களூரு விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் தந்தைக்காக, வெளியே மகள் காத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. பயணியர் தங்கள் பயணம் துவங்கும் முன், உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் விமான நிலையத்துக்குள் நுழையும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன.அதிநவீன வசதிகள் முதல் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணியருக்கும் ஏற்ற சிந்தனைமிக்க சேவகைள் வரை, விமான நிலைய அனுபவத்தின் ஒவ்வொரு அம்சமும் பயணியரின் பயணத்தை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, ரிக்கி கேஜ் கூறியதாவது:நான் உருவாக்கும் ஒவ்வொரு இசையும், என்னுள் ஒரு பகுதி. எனது இரண்டாவது தாயகமான பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்காக பாடலை இசையமைத்தது, அனுபவத்தை அதிகரித்துள்ளது.இந்த பாடல் எனக்கும், என் தோழி லோனி பார்க்கிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது விமான நிலையத்தின் அழகை மேம்படுத்துவது மட்டுமின்றி, விமான நிலையத்தின் கலாசார முக்கியத்துவத்தையும் எப்போதும் போல பசுமையாக வைத்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasubramanian
ஜூலை 22, 2024 10:28

என்னை கவர்ந்த விமான நிலையம் அது பெங்களூரு டெர்மினல் 2 விமான நிலையம்தான். மிகவும் அழகான விமான நிலையம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை