மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
புதுடில்லி:“மனிதாபிமான அடிப்படையில் டில்லிக்கு யமுனையில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,”என, ஹரியானா அரசுக்கு டில்லி நீர்வளத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தலைநகர் டில்லியில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. யமுனையில் தண்ணீர் வரத்து குறைந்ததால், டில்லி மக்களுக்கு லாரி வாயிலாக குறைந்த அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி நேற்று கூறியதாவது:மனிதாபிமான அடிப்படையில் யமுனையில் டில்லிக்கு கூடுதல் தண்ணீரை ஹரியானா அரசு திறந்து விட வேண்டும். முனான்க் கால்வாய் மற்றும் வஜிராபாத் தடுப்பணை ஆகியவற்றில் கச்சா நீர் மிகவும் குறைந்து விட்டது. யமுனையில் தண்ணீர் வரத்து குறைந்ததால், நீர்சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் டில்லி மக்களுக்கு யமுனையில் கூடுதல் தண்ணீரை ஹரியானா அரசு திறந்து விட வேண்டும்.வஜிராபாத் அணையின் நீர்மட்டம் 674.5க்குப் பதிலாக 6அடி குறைந்து 668.5 அடியாகவும், முனான்க் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் 902 கன அடியாகவும் குறைந்துள்ளது.அதேபோல, முனான்க் கால்வாயில் கடந்த 10-ம் தேதி 925 கனஅடி தண்ணீர் வந்தது. மறுநாள் 919 கனஅடியாகக் குறைந்தது. அதுவே, 12ம் தேதி 903 கன அடிக்குச் சென்றது. நேற்று 902 கனஅடிக்கு சென்று விட்டது. நேற்று முன் தினம் நடந்த மேல் யமுனை நதிநீர் வாரியக் கூட்டத்தில் டில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.ஹிமாச்சல பிரதேசம் தான் பயன்படுத்தாத உபரி நீரை டில்லிக்கு வழங்க தயாராக உள்ளது. ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் போனில் பேசினேன், டில்லிக்கு உபரி நீரை திறந்து விடுவதாக உறுதியளித்தார்.டில்லி குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தண்ணீர் கிடைக்காத பகுதிகளை ஆய்வு செய்து தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, டில்லி குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் வாயிலாக டில்லி மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறோம். பாவானா, துவாரகா மற்றும் நங்லோய் போன்ற பகுதிகளில் அவசரகால கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அரசியல் நாடகம்!
டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:கூடுதல் தண்ணீருக்காக மேல் யமுனை நதிநீர் வாரியத்தை அணுகுமாறு டில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்கு கடிதம் அனுப்புகின்றனர். இதன் வாயிலாக புதிய அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர். டில்லியில் 70 சதவீதம் தண்ணீர், டேங்கர் மாபியா கும்பலால் திருடப்படுகிறது. மேலும் பல இடங்களில் தண்ணீர் கசிவு உள்ளது. அவற்றைத் தடுக்க டில்லி அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, மத்திய அரசு மற்றும் ஹரியானா அரசை குற்றம் சாட்டி நாடகம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.மேல் யமுனை நதிநீர் வாரியம் மட்டுமே டில்லிக்கு கூடுதல் தண்ணீர் தர முடியும் என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் மிகத்தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அணுகுவது ஏன் என்றுதான் தெரியவில்லை? ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து டில்லிக்கு தேவையான தண்ணீர் முழுதுமாக வழங்கப்படுகிறது. இதுபற்றி, டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி சிங், நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா?இவ்வாறு அவர் கூறினார். காங்., போராட்டம்
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, டில்லி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் முழுதும் 280 தொகுதிகளிலும் நேற்று காலை 10:00 மணிக்கு, போராட்டம் நடத்தப்பட்டது.தலையில் மண் பானைகளை சுமந்தவாறு, டில்லி அரசு மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். போராட்டத்தின் முடிவில் மண் பானைகளை உடைத்தனர்.டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், “தண்ணீர் பற்றாக்குறை குறித்து விவாதிக்க சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும்,”என்றார். அமைச்சருக்கு கடிதம்
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி சட்டசபை தலைமைக் கொறடா திலீப் பாண்டே தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனுப்பியுள்ள கடிதம்:யமுனை நதி நீர் பங்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடிக்கிறது. இந்த விஷயத்தில் அரசியல் பாகுபாடு இல்லாமல் டில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். டில்லி மக்களின் தாகத்தை தீர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த மத்திய ஜல்சக்தி துறை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். மத்திய அமைச்சரின் தலையீடு இல்லாமல் எந்த தீர்வும் ஏற்படாது. இந்த விவகாரம் குறித்து விளக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.யமுனை நதியில் டில்லியின் பங்கு தண்ணீரை பா.ஜ., ஆளும் ஹரியானா அரசு தடுத்து வைத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதால் தண்ணீர் தடையின்றி வருவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
6 hour(s) ago | 2
12 hour(s) ago