உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளை அறிக்கை  அசோக் கோரிக்கை

வெள்ளை அறிக்கை  அசோக் கோரிக்கை

பெங்களூரு: ''பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோடை விடுமுறை முடிந்து, கடந்த மாத இறுதியில் அரசு பள்ளிகள் துவங்கி விட்டன. ஆனால், இன்னும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படவில்லை. இது சரியல்ல. ஐந்து வாக்குறுதி திட்டங்களால், அரசால் பாடப் புத்தகங்கள் வழங்க முடியவில்லை. மாணவர்கள் கல்வியுடன் விளையாடுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.பால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்க வேண்டிய நிலைக்கு, காங்கிரஸ் அரசு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் நிதி நிலை நன்றாக இருப்பதாக முதல்வர் கூறி வருகிறார். நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை