மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
புதுடில்லி முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் ராணுவத்தில், 'அக்னி வீர்' என்ற புதிய திட்டத்தை 2022ல் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் வாயிலாக, மூன்று படைப்பிரிவுகளிலும், நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் அக்னி வீரர்கள் பணியமர்த்தப்படுவர். இதில், 25 சதவீதத்தினருக்கு மட்டுமே, 15 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியதாவது:கடந்த 1ம் தேதி நிலவரப்படி, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் மொத்தமுள்ள 10 லட்சத்து, 45 ஆயிரத்து 751 இடங்களில் 84,106 இடங்கள் காலியாக உள்ளன. யு.பி.எஸ்.சி. - எஸ்.எஸ்.சி., ஆகியவற்றின் வாயிலாக இந்த காலியிடங்களை நிரப்ப அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 10 சதவீத இடங்களை, முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. கான்ஸ்டபிள் மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கவும், உடல் தகுதி திறன் தேர்வில் விலக்கு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில், அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் வரையில் தளர்வு அளிக்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago