உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் ரேவண்ணா அட்மிட்

மருத்துவமனையில் ரேவண்ணா அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் மகன் ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கர்நாடகாவில் ம.ஜ.த.,வை சேர்ந்த, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, 66. ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ.,வான இவரது மகன் பிரஜ்வல், 33. ஹாசன் எம்.பி.,யாக உள்ளார்.இந்நிலையில் தந்தை - மகன் மீது வீட்டு வேலைக்கார பெண், கடந்த 27ம் தேதி ஹொளேநரசிபுரா போலீசில், பாலியல் புகார் அளித்தார். இதன்படி இருவர் மீதும், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவானது.இன்னொரு வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் ரேவண்ணாவை, சிறப்பு விசாரணை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில் சிறப்பு விசாரணைக்குழு காவலில் உள்ள ரேவண்ணாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வரதன்
மே 08, 2024 08:04

திருட்டு திராவிடனுக்கு திடீர்னு உடம்புக்கு வந்துரும்.


Kasimani Baskaran
மே 08, 2024 05:36

மீசை நரைத்தாலும் ஆசை விடவில்லை என்பது சோகத்துக்குக்காரணம் பிள்ளை பெற்றால் அதை ஒழுங்காக வளர்க்க வேண்டும் கோவில் காளை போல ஊரை சுற்ற அப்பன் மகனுக்கு சொல்லிக்கொடுத்ததுதான் அடிப்படை பிரச்சினை


தாமரை மலர்கிறது
மே 08, 2024 02:10

தமிழக திராவிட அரசு மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசு போலீஸ் ஸ்டேட்டாக மாறிக்கொண்டு வருகிறது எதிர்கட்சியினர் மீது அபாண்ட குற்றச்சாட்டை போட்டு, கைது செய்து சிறையில் சித்ரவதை செய்கிறார்கள் இங்கே சவுக்கு சங்கரின் கை காலை உடைத்து சித்ரவதை செய்கிறார்கள் அங்கே தேவகவுடாவின் மகனுக்கு டார்ச்சர் கொடுத்து, தேவ கவுடா அரசியலில் கவனம் செலுத்தமுடியாதபடி நயவஞ்சகமாக வறுபுறுத்துகிறார்கள் தேர்தல் முடிந்தவுடன் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி முடக்கப்படும்


மேலும் செய்திகள்