பெங்களூரு: ''அங்கன்வாடிகளில் வழங்கப்படும், அழுகிய முட்டையை ஒரு முறை நீங்கள் தின்று பார்த்தால், அங்கு எப்படிப்பட்ட உணவு வழங்கப்படுகிறது என, உங்களுக்கு தெரியும்,'' என மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்குகண்டனம் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., - ஹேமலதா நாயக்: அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை.அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்: சிறார்களுக்கு அரசு, ஊட்டச்சத்தான உணவு வழங்குகிறது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஹேமலதா நாயக்: பெரும்பாலான அங்கன்வாடிகளில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது.அழுகிய முட்டை, வாழைப்பழம், கெட்டு போன கடலை மிட்டாய்வழங்குகின்றனர். இந்த உணவு சாப்பிடதகுதியானதாக இல்லை.(லட்சுமி ஹெப்பால்கர்,விளக்கமளிக்க முற்பட்டபோது, இடைமறித்த மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, நீங்கள் முட்டை சாப்பிடுவீர்களா. அங்கன்வாடிகளில் வழங்கும் முட்டையைஒரு முறை தின்றுபாருங்கள். அங்குள்ளசூழ்நிலை உங்களுக்கு தெரியும்)லட்சுமி: நான் இதுவரை முட்டை சாப்பிட்டதுஇல்லை. கையாலும் தொட்டதில்லை. அங்கன்வாடிகளில் பிரச்னைகள் இருந்தால், அதை சரிசெய்கிறேன்.பசவராஜ் ஹொரட்டி: சபை உறுப்பினர்களுடன், அங்கன்வாடிகளை நேரில் சென்று ஆய்வு செய்யுங்கள். பிரச்னைகளை தீர்த்து வையுங்கள்.'இந்த சந்தர்ப்பத்தில், ஹேமலதா நாயக், பையில் கொண்டு வந்திருந்தஅழுகிய முட்டைகளை, சபையில் காண்பிக்கமுற்பட்டார். ஆனால், அதற்கு மேலவைதலைவர் அனுமதி அளிக்க வில்லை)லட்சுமி: அங்கன்வாடி மையங்கள் துவங்கி, 49 ஆண்டுகள் ஆகின்றன. கடவுள் கருணையால், இதுவரை எங்கும் கசப்பான சம்பவங்கள் நடக்கவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.