உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரவுடி கைது மனைவி தற்கொலை முயற்சி

ரவுடி கைது மனைவி தற்கொலை முயற்சி

ராம்நகர்: ரவுடி கைது செய்யப்பட்டதால், துாக்க மாத்திரை தின்று மனைவி தற்கொலைக்கு முயன்றார்.ராம்நகர் ஐசூரை சேர்ந்தவர் மகாலிங்கம். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல், கடந்த சில மாதங்களாக, மகாலிங்கம் தலைமறைவாக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். தகவல் அறிந்த ஐசூர் போலீசார், மகாலிங்கத்தை கைது செய்தனர். இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி அம்ருதா, அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை