உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்கூட்டர் ஓட்டிய 15 வயது மகன் தாய்க்கு ரூ.25,000 அபராதம்

ஸ்கூட்டர் ஓட்டிய 15 வயது மகன் தாய்க்கு ரூ.25,000 அபராதம்

மாண்டியா: மாண்டியா மாவட்டம், மத்துாரின் கே.எஸ்.ஆர்.டிசி., பஸ் நிலையம் அருகில், சில நாட்களுக்கு முன்பு, போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 15 வயது சிறுவன், ஸ்கூட்டர் ஓட்டி வந்ததை பார்த்தனர். அவரை தடுத்து நிறுத்தி, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் சிறுவன் ராம்நகர், பிடதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இவர் ராம்நகரில் இருந்து, மாண்டியாவுக்கு ஸ்கூட்டரில் சென்றதை ஒப்புக்கொண்டார்.இவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர், இவரது தாய் மதுவந்தியுடையது என்பது தெரிந்தது. விசாரணையை முடித்த போலீசார், மத்துாரின் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணை நடத்திய நீதிமன்றம், மைனர் மகனுக்கு ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தாய்க்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.'18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம். இவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும், பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு, வாகனத்தை கொடுக்கக் கூடாது' என நீதிமன்றம் அறிவுறுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ