பெங்களூரு: பெங்களூரில் ஜனவரி முதல் ஜூலை வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 53.62 லட்சம் வழக்குகள் பதிவாகின. 35.38 கோடி ரூபாய் அபராதம் வசூலானது.இது தொடர்பாக, பெங்களூரு போக்குவரத்து போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் சாலை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 53.62 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரியில் 8.47 லட்சம், பிப்ரவரியில் 7.79 லட்சம், மார்ச்சில் 7.43 லட்சம், ஏப்ரலில் 6.90 லட்சம், மே மாதம் 8.49 லட்சம், ஜூனில் 6.96 லட்சம், ஜூலையில் 7.53 லட்சம் வழக்குகள் பதிவாகின.போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க, நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் கேமராக்களில் பதிவாகின்றன. இதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.போக்குவரத்து விதிகளை மீறுவோரின் மொபைல் போனுக்கு தகவல் அனுப்பி அபராதம் செலுத்தும்படி உத்தரவிடுகிறோம். கண்களை கூச வைக்கும், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தியது தொடர்பாக, நகரில் 9,046 வழக்குகள் பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.நடப்பாண்டு போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களிடம், 35.38 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 28,231 பஸ்கள், 8,305 சரக்கு வாகனங்கள், 15,427 ஆட்டோக்கள், 7.47 லட்சம் இலகு ரக வாகனங்கள், 45.40 லட்சம் இருசக்கர வாகனங்கள், 22,249 டெம்போக்கள் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
....பாக்ஸ்....
ஐந்து ஆண்டு போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் விபரம்:ஆண்டு- பதிவான வழக்கு - வசூலான அபராதம்2019-79.67 லட்சம்- ரூ.89.18 கோடி2020-84.06 லட்சம்-ரூ.84.06 கோடி2021-93.58 லட்சம்-ரூ.140.32 கோடி2022-104.66 லட்சம்-ரூ.179.76 கோடி2023-90.00 லட்சம்-ரூ.185.14 கோடி2024-53.62லட்சம்-ரூ.35.38 கோடி(ஜூலைவரை)***